சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும் : நிதிஷ் குமார்


2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதி வாரி மக்கள் தொகையின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் இவ்வாறு கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறும் போது, “சாதி வாரி கணக்கெடுப்பின் விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் மக்கள் தொகையில் தங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள வேண்டும். 

அனைத்து பிரிவினரின் சமூக பொருளாதார வளர்ச்சியை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு முடிவுகள் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை வெளிக்கொண்டு வரும். சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்ட வேண்டிய திட்டங்களை வகுக்கவும் உதவும்” என்றார். 

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும் கலந்து கொண்டது கவனிக்கத்தக்கது.
சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும் : நிதிஷ் குமார் சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும் : நிதிஷ் குமார் Reviewed by நமதூர் செய்திகள் on 00:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.