மும்பையில் இடஒதுகீடுக்காக போராட தயாராகும் முஸ்லிம்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தற்போது முஸ்லிம்களும் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை வலுவாக எழுப்ப தொடங்கியுள்ளனர்.
வருகிற மாதங்களில் பல முஸ்லிம் அமைப்புகள் இணைந்து மாநில அரசிடம் இட ஒதுக்கீடு கேட்டு மும்பையில் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவின் முந்தைய அரசு மராத்தா சமூகத்திற்கு கொடுத்த இட ஒதுக்கீடை பாம்பே உயர்நீதி மன்றம் ரத்து செய்திருந்தது. ஆனால் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட ஐந்து சதவிகித இட ஒதுக்கீட்டை அனுமதித்திருந்து. ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இது ரத்து செய்ப்பட்டது.
கடந்த திங்கள் கிழமை சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ002Eஅபு ஆசிம் அஸ்மி, AIMIM கட்சி எம்.எல்.ஏ.வாரிஸ் பதான், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆரிஃப் நசீம் கான் மற்றும் அமின் படேல் ஆகியோர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்காக குழு ஒன்றை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். வருகிற வாரத்தின் தொடக்கத்தில் காங்கிரஸ் ராஜிய சபா எம்.பி. ஹுசைன் தல்வை, ஹஜ் ஹவுசில் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்னெடுக்க முஸ்லிம் அமைப்பினர்களின் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
AIMIM கட்சி நாக்பூரில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளது. இது குறித்து AIMIM இன் எம்.எல்.ஏ.வான இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், இந்த கோரிக்கை அனைவராலும் ஏன் நீதிமன்றத்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை. இந்த விவாகரம் குறித்து அரசை அதன் உறக்கத்தில் இருந்து எழுப்ப பனிக்கால கூட்டத்தொடரின் போது சட்டமன்றம் நோக்கி பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். இன்னும் அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
முஸ்லிம் வல்லுனர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆமிர் இத்ரீசி, “முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய பின்னரும் எந்த ஒரு அரசியல் தலைவர்களும் இது குறித்து பேச தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இது குறித்து மெளனம் சாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் அரசு முஸ்லிம் சமூகத்தினரில் உள்ள 50 பிரிவினர்களுக்கு அவர்களை புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (Special Backward Category-A) வில் சேர்த்து 5% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது.
மும்பையில் இடஒதுகீடுக்காக போராட தயாராகும் முஸ்லிம்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:22:00
Rating:
No comments: