திடீரென ரத்த சிவப்பில் ஓடும் நதி!


இயற்கை வளங்களை முறையாக பராமரிக்காவிடின் அதன் விளைவுகள் அச்சுறுத்துவதாக அமையும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. அதைக் கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக, ரஷ்யச் சுற்றுச்சூழல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆற்றின் நிற மாற்றத்துக்கான அறிவியல்பூர்வமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அருகில் உள்ள தொழிற்சாலைகள் மீது மக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். தொழிற்சாலை குழாயில் உடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அதன் காரணமாக இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என ரஷ்ய சுற்றுச்சூழல்துறை கருத்து தெரிவித்துள்ளது.
டால்டிகான் ஆறு செல்லும் நோரில்ஸ்க் நகரம் ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான நகரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் கண்ணெதிரே அழகாக ஓடிக்கொண்டிருந்த நதி, திடீரென நிறம் மாறி ஓடுவது நதியின் எதிர்காலம் குறித்தும் அங்கு இருக்கும் சுற்றுச்சூழல் மாசடைவது குறித்தும் நோரில்ஸ்க் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்
திடீரென ரத்த சிவப்பில் ஓடும் நதி! திடீரென ரத்த சிவப்பில் ஓடும் நதி! Reviewed by நமதூர் செய்திகள் on 06:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.