காங்கிரஸில் பிரியங்கா காந்திக்குப் பதவி!
உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். கட்சியில் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகவே இருந்து வந்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்றும், அவரை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கட்சிக்குள் கோரிக்கைகள் பலமாக எழுந்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடாத பிரியங்கா, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
உடல்நலக் குறைவால் சோனியா காந்தி ஓய்வெடுத்து வரும் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அவருக்கு பதிலாக ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட உள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக பிரியங்கா காந்திக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்துள்ளார் ராகுல். இவர் பிப்ரவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கவுள்ளன. இந்த அணியில் காங்கிரஸ் இல்லாத நிலையில், பிரியங்காவுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் காங்கிரஸை வெற்றி நோக்கி நகர்த்தலாம் என்று கருதுகிறார் ராகுல்.
https://minnambalam.com/k/2019/01/23/56
காங்கிரஸில் பிரியங்கா காந்திக்குப் பதவி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:22:00
Rating:
No comments: