பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொல்.திருமாவளவன் வழக்கு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
முற்பட்ட பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
சமூக நீதி அடிப்படையிலான இடபங்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை மத்திய பாஜக அரசு திணித்திருக்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதனை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோதே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அதன் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். தற்போது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொல்.திருமாவளவன் வழக்கு
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:54:00
Rating:
No comments: