வாக்குச்சீட்டு முறை: 22 எதிர்க்கட்சிகள் மனு!

வாக்குச்சீட்டு முறை: 22 எதிர்க்கட்சிகள் மனு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட 22 எதிர்க்கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 3) புகார் மனு கொடுத்துள்ளன.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சைபர் நிபுணர் ஒருவர், 2014ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன. அதனால்தான் காங்கிரஸ் 201 இடத்தில் தோற்றது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம், சைபர் நிபுணருக்கு எதிராக டெல்லி காவல் துறையில் புகார் அளித்திருந்தது.
இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, உலகில் ஒரு சில நாடுகளில் மட்டும்தான் வாக்குப்பதிவு இயந்திர முறை பின்பற்றப்படுவதாகவும், மற்ற நாடுகள் எல்லாம் வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டதாகவும், இதுதொடர்பாக பிப்ரவரி 3ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், “வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை அனைத்து வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர். அரசியலமைப்பு, நாடு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
https://minnambalam.com/k/2019/02/05/10
வாக்குச்சீட்டு முறை: 22 எதிர்க்கட்சிகள் மனு! வாக்குச்சீட்டு முறை: 22 எதிர்க்கட்சிகள் மனு! Reviewed by நமதூர் செய்திகள் on 03:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.