மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்
மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை முடிவுக்குக் கொண்டுவரக்கோரி ராஜஸ்தான், உத்தரகாண்ட, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் நேற்று (பிப்ரவரி 25) ஜந்தர் மந்தரில் பேரணி நடத்தினர்.
"இந்தியாவில், பாதாளச் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் துப்புரவுத் தொழிலாளர்களில் தினமும் ஒரு துப்புரவுத் தொழிலாளி இறக்கின்றனர். இந்த கொலையைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதாளச் சாக்கடை, மலக்குழிகளை சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த இயந்திரங்களை உபயோகிக்க எங்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும்.
இந்தியாவில் கடந்த 2017 ஜனவரி தொடங்கி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 5 நாட்களுக்கு ஒரு துப்புரவுத் தொழிலாளி உயிரிழப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. தேசியத் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆணையம் இந்த கணக்கீட்டை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் பலியான துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 123 என உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று இந்த பேரணியை ஏற்பாடு செய்த ஆடி தர்ம சாமாஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து யோகேந்திர யாதவ் கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி துப்புரவுத் தொழிலாளியின் காலை கழுவுகிறார். ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களின் இறப்பு குறித்து ஒருபோதும் பேசமாட்டார்" என்று கூறினார்.
"துப்புரவு தொழிலில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் நல்ல அரசாங்க வேலைகள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார்.
மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:31:00
Rating:
No comments: