அர்னாப் கோஸ்வாமி மீது பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட்
மக்கள் ஜனநாயக கட்சியின் நயீம் அக்தர் என்பவர், தன் மீது ரீபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அத்தொலைக்காட்சியின் மூன்று பத்திரிகையாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்களது தொலைக்காட்சி வாயிலாக பிரப்பினர் என்று அவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். அதனால் இவர்கள் IPC பிரிவு 499மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரீபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, ஜீனத் ஜீஷான் ஃபாஸில், ஆதித்யா ராஜ் கவுள் மற்றும் சகல் பட் ஆகியோரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டிசம்பர் 27 அன்று உத்தரவிட்டார்.
ஆனால் கடந்த சனிக்கிழமை அர்னாப் கோஸ்வாமியின் வழக்கறிஞர் இர்ஷாத் அகமத், கஷ்மீரில் தற்போதுள்ள நிலையை சுட்டிக்காட்டி தங்களது கட்சிக்காரர்களான அர்னாப், கவுள், மற்றும் பட் ஆகியோர் வர இயலாது என்றும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஃபாஸில் என்பவர் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியிலான பணிகளில் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் உள்ள பதிவுகளின் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்திரிகையாளராக பணியாற்றுபவர்கள். தற்போதைய நிலையில் அனைத்து பத்திரிகையாளர்களும் கஷ்மீரில் செய்தி சேகரிக்க குவிந்துள்ள நிலையில் இவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் அதனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் மீது பிணையில் வெளி வரமுடியாத முடியாத கைது ஆணை பிறப்பித்து இவர்களை வருகிற மார்ச் 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு மூத்த காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அர்னாப் கோஸ்வாமி மீது பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:02:00
Rating:
No comments: