இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்வதில் சிக்கல் இல்லை!

இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்வதில்  சிக்கல் இல்லை!
ஜித்தா(23 ஜூலை 2017): இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் 2000 ரூபாய் நோட்டு கொண்டு வருவதில் சிக்கல் எதுவும் இல்லை என்று இந்திய consul general நூர் அப்துற்றஹ்மன் சேக் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வர வேண்டாம் என வதந்தி பரவியது. இந்நிலையில் சவூதி counsel general நூர் அப்துற்றஹ்மான் சேக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட வகையில் அப்படி எந்த தகவலும் இல்லை. சவூதி அரசு இந்திய 2000 ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது எனவே வதந்தியை நம்ப வேண்டாம் எனவும், 2000 ரூபாய் நோட்டுக்களை ஹஜ் பயணிகள் கொண்டு வரவலாம் எனவும் தெரிவித்தார்.
இந்திய ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவில் ஒவ்வொரு வருடமும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவை சவூதியில் ரியாலாக மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கபட்டுள்ளது.
இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்வதில் சிக்கல் இல்லை! இந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்வதில் சிக்கல் இல்லை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.