ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியல்ல, பிரணாப் முகர்ஜி - திபாங்கர் தே சர்கார்

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியல்ல, பிரணாப் முகர்ஜி - திபாங்கர் தே சர்கார்

இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், அவரது மனம்திறந்த பேச்சு இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவருகிறது.
இரண்டு முறை வாய்ப்பு
மென்மையான குரல் மற்றும் குறைந்த உயரத்துடன் கூடிய பிரணாப் முகர்ஜி, இந்த அரசியல் அரங்கில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவராவர். எல்லோருக்கும் பிடித்தமான, தலைசிறந்த பிரதம அமைச்சரை இந்தியா இதுவரை பெறவில்லை. ஆனால், தொடக்கத்தில், அரசியல் விஞ்ஞானப் பேராசிரியராகப் பணிபுரிந்த பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரணாப், ஒருவேளை காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதம அமைச்சர் பதவிக்கு வந்திருக்கலாமோ, என்னமோ யார் அறிவார்? அத்தகைய அரிய வாய்ப்பு பிரணாப் முகர்ஜிக்கு இரண்டு முறை கிடைத்தது. அதில், முதலாவதாக, 1984ஆம் ஆண்டு அக்டோபரில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இரண்டாவது இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி, இந்திராவின் மகனான ராஜீவ் காந்தி ஒரு கருத்தொன்றை தேர்ந்தெடுத்தபோது, இடைக்கால பிரதமர் என்ற பரிந்துரையை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். ஆனால், அவரது அரசியல் எதிரிகள் பிரணாப் முகர்ஜி அதை உடனடியாக ஒப்புக்கொண்டார் என்று வதந்தி பரப்பியதாக இந்திரா காந்தியின் செயலாளர் பி.சி. அலெக்ஸாண்டர் குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து, இரண்டாவது வாய்ப்பாக, 2004ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகர்ஜிக்குப் பதிலாக மன்மோகன் சிங்கைப் பிரதமராக தேர்ந்தெடுத்தபோது, காங்கிரஸுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். 2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்திருந்த நிலையில், ஊழல் மோசடிகளில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் சிக்கியிருந்ததால் காங்கிரஸ் குதிரை பேரத்தில் ஈடுபட்டது என்று பலர் வாதிட்டனர்.
ஜனாதிபதியாக
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி தூக்கியடிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், அவர் ஒரு முழுமையான அரசியல் மனநிலையைக் கொண்டிருந்தார். ஒருங்கிணைப்பாளர் என்பது, அரசியல் கருத்தொற்றுமையை உருவாக்குவது, ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வது, சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது, எப்போது பின்வாங்க வேண்டுமென்று தெரிந்துகொள்வது, ஆலோசனை விஷயங்களைத் தனக்குள்ளே வைத்துக்கொள்வது, தனியார் மற்றும் முக்கியமாக பொது இடங்களில் எப்படிப் பேச வேண்டுமோ, அதைச் செய்வதுதான் அதற்கான பணியாகும். இந்தியாவில் நல்ல ஜனாதிபதியாக வருவதற்கு இதில் கடைசி இரண்டு தான் தேவையானதாகும். இந்திய அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் இந்திய ஜனாதிபதி பதவியை பிரிட்டிஷ் மன்னருக்கு இணையாக, அதேவேளையில், பிரிட்டிஷ் பிரதம மந்திரியைவிட அதிக அதிகாரங்களை வழங்கினர். முகர்ஜி, மிகச் சிறந்த பிராமணர். கல்வியறிவு கொண்ட சிந்தனையாளராக இருந்ததால், இந்த ஆட்சி அதிகாரத்தில் நடித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மேலவை சவால்களையும், பாஜக-வின் இந்துத்துவ அரசியல் நிறத்தையும் முழுமையாக அறிந்திருந்த ஜனாதிபதி, பல்வேறு நிலையில் அரசியலமைப்பால் வரையரைக்கப்பட்ட எல்லைகளை ஒருமுறைகூட மீறாமல், ஜனாதிபதி தனது கருத்துக்களைக் குறிப்பாக மூன்று சிக்கலான நேரங்களில் வலிமை வாய்ந்த முறையில் அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்ற நடைமுறைகளை மதிக்க வேண்டியதன் அவசியம்; மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் பரந்த முக்கியத்துவம் மற்றும் ஊடகம் மற்றும் எதிர்ப்பு கருத்துக்கு மரியாதை கொடுப்பதற்கான முக்கியத்துவம். அதே சமயம், சட்டமியற்றலைத் தடுத்து முற்றுகையிடுவது குறித்து, நாடாளுமன்றம் தனது வேலையைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை எதிர்த்துப் பேசினார். அவர் கூறியவற்றில் முக்கிய கருத்துகளைக் காணலாம்:
ஒழுங்கு விதி
விவாதம் இல்லாமல் சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் பணியைப் பாதிக்கிறது. அது மக்கள் கொடுத்த நம்பகத்தன்மையை மீறுகிறது. இது ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. அந்தச் சட்டங்களை குறித்து, நாட்டின் 66ஆவது குடியரசு தின உரையில் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே கூறியுள்ளார். ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் இது தொடர்பாக ஏற்கனவே 11 தடவை அவற்றை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது .
நாடாளுமன்றத்தில் விவாதம்
ஒரு செயல்படும் சட்டமன்றம் இல்லாமல் ஆட்சி இருக்க முடியாது. சட்டமன்றம் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. சட்டமன்றத்தில் மக்களின் நாகரிக வாழ்க்கைக்கேற்ப முற்போக்கான சட்டம் இயற்றி மக்களுடைய அபிலாஷைகளை உருவாக்க வேண்டும். இதில், மாற்றுக் கருத்துடையவர்களை சமரசப்படுத்துவதற்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்குமான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.
மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மை
“மதச்சார்பின்மை என்ற கருத்து நம் நாட்டின் அனைவரது மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஒரு சகிப்புத்தன்மையற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்களின் மனதில் இது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்” என்று பிரணாப் முகர்ஜி கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் கூறினார்.
“நான் என் கண்களை மூடிக்கொண்டு சிந்தித்து பார்க்கையில், என் நாட்டில் 100-க்கும் அதிகமான மொழிகளைப் பயன்படுத்துகின்ற, 1.3 பில்லியன் மக்கள் தொகையுடன், மூன்று பிரதான இனங்களைச் சேர்ந்த ஏழு முக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள், ஒரே அமைப்பு மற்றும் ஒரே கொடியுடன், நாம் அனைவரும் இந்தியன் என்ற அடையாளத்தில் இருக்கிறோம். இது நமது பன்முகத்தன்மையின் கொண்டாட்டம்” என்று பிரணாப்முகர்ஜி இந்த ஆண்டு கூறினார்.
அதிருப்தி மதிப்பில்
“இந்தியா போன்ற ஒரு துடிப்பான, ஆரோக்கியமான ஜனநாயகத்தில் தீர்மானம் எடுக்கும்போது, பொது விவாதத்துக்குக் கலந்துரையாடல், கருத்து வேறுபாடு முக்கியம். எப்போதும் விவாதத்துடன் கூடிய இந்தியர்களுக்கு இடையில் இருக்கலாம். ஆனால் சகிப்புத்தன்மையற்ற இந்தியர்களுக்கு இடையில் இருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கும்
“ஊடகங்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான செய்திகளுக்கு தனது உறுதிப்பாட்டில் இருந்து வழுவாமலும், தியாகம் செய்யாமலும், இணக்கத்திற்கு எதிராக எப்போதும் பாதுகாப்பாகவும் இருப்பதின் மூலம், இழுக்கும் அழுத்தங்களைக் கலைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியை பல ஆண்டுகளாக நன்கு அறிந்த டெல்லியைச் சார்ந்தவர் ஒருவர் கூறுகையில், “முன்னாள் ஜனாதிபதிகளை போன்று , ‘ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி’யாக இவர் இருக்க மாட்டார்” என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் மோடியைப் பொறுத்தவரையில் சேவைத் தலைமை என்று பிரணாப் அழைக்கிறார். ஆனால், அவர் தனது மனதில் இருக்கும் கருத்தை வெளியே யாருக்கும் தெரிவிப்பதில்லை. அவர் பலமுறை என்னிடம் கூறுகையில், ஜனாதிபதி ஒரு படத்தை உருவாக்கப் போவதில்லை, கட்டட நிகழ்வுகள் என்றுமே ஜனநாயகத்திற்குச் சேவை செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குறித்து, பிரதமர் மோடி கடந்த சில நாள்களுக்கு முன்பு பேசுகையில், தன்னை ஒரு மகனைப் போலவே கையாண்டதாகவும், அவரது உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டு விசாரித்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் அவர் பதவி முடிவடைவதற்கு முன்பாக, தனது கடைசி பொது அறிக்கையில் முகர்ஜி கூறுகையில், “எனக்கும், பிரதமருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், இருவரும் தங்களுக்குள் நெருக்கமான ஒத்துழைப்புடனே எப்போதும் செயல்பட்டோம். ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் இடையில் உள்ள உறவில் பாதிப்படையவில்லை. தலைமை நிர்வாகி என்ற பதவிக்கும் நிர்வாகத்தின் உண்மையான தலைவர் என்ற பதவிக்கும் இடையில்தான் இருந்தது” என்று கூறினார்.
1991ஆம் ஆண்டு பி.ஜே.பி தலைவர்கள் மற்றும் இந்துத்துவா ஆதரவு குழுக்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம்தான் முகர்ஜியால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தது. 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது சுயசரிதையின் இரண்டாம் தொகுதியில், “இந்தச் செயலால், அனைத்து இந்தியர்களும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத வேண்டும். அது ஒரு மத அமைப்பின் முட்டாள்தனமான, முற்றிலும் அரசியல் முடிவுக்கேற்ப நடத்தப்பட்ட அழிவாகும். இது இந்தியாவின் சகிப்புத்தன்மையையும், பன்மைவாத நாடென்பதையும் அழித்து, அனைத்து மதங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைத்து விட்டது” என்று பிரணாப் முகர்ஜி கூறியது வலுவான வார்த்தைகளாகும்.
நன்றி: லைவ் மின்ட்
மொழியாக்கம்: இ.சி.பிர்லா
ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியல்ல, பிரணாப் முகர்ஜி - திபாங்கர் தே சர்கார் ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியல்ல, பிரணாப் முகர்ஜி - திபாங்கர் தே சர்கார் Reviewed by நமதூர் செய்திகள் on 05:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.