அரசுப் பணி : 81 லட்சம் பேர் காத்திருப்பு!

அரசுப் பணி : 81 லட்சம் பேர் காத்திருப்பு!

தமிழகத்தில் 81 லட்சம் பட்டதாரிகள் அரசு வேலைக்காகக் காத்திருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
மாநில அரசுப் பணிகளுக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும். கடந்த மாதம் வரை தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக எத்தனைப் பேர் பதிவு செய்துள்ளனர் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளின் படி, தமிழகத்தில் 81,77,472 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு மாநில அரசுப் பணிகளுக்காக காத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் கல்லூரிப் படிப்பை முடித்த 23 வயதுக்கும் குறைவான ஆண்கள் மற்றும் பெண்கள் 21 லட்சம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 முதல் 35 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் 29 லட்சம் பேர் அரசுப் பணிகளுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களே அதிகம். இதில் 3.92 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும், 2.86 லட்சம் முதுகலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். மேலும் 216 சட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகளும், 794 மருத்துவப் படிப்பு முடித்த பட்டதாரிகளும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
அரசுப் பணி : 81 லட்சம் பேர் காத்திருப்பு! அரசுப் பணி : 81 லட்சம் பேர் காத்திருப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 02:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.