நீட் தேர்விற்கு வலுக்கும் எதிர்ப்பு!

நீட் தேர்விற்கு வலுக்கும் எதிர்ப்பு!

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை நாங்கள் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்தே எதிர்த்து வருகிறோம், தற்போதும் எதிர்ப்பு நிலையில்தான் உள்ளோம் என்று, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு, அடிக்கல் நாட்டும் விழா இன்று ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி .உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,'சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் தரப்பட்டுள்ளதாகக் கூறிய டிஐஜி ரூபா ஒரு விளம்பரப் பிரியை. சிறையில் சசிகலாவுக்கு சலுகை ஏதும் வழங்கப்படவில்லை. அதற்காக லஞ்சமும் கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா உயர்மட்ட குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு உண்மை நிலை தெரியவரும். இந்த பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை, நாங்கள் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்தே எதிர்த்து வருகிறோம். நீட் விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு நிலையையே கடைபிடித்து வருகிறோம். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் உள் ஒதுக்கீடு என்கிற அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே தமிழக மாணவர்களின் நலன் காக்கப்படும்.
மேலும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 85 சதவிகிதம் வரை நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
நீட் தேர்விற்கு வலுக்கும் எதிர்ப்பு! நீட் தேர்விற்கு வலுக்கும் எதிர்ப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 05:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.