பாமக-வுக்கு வயது 29

பாமக-வுக்கு வயது 29

பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று 29ஆவது பிறந்த நாள். கடந்த 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சென்னை கடற்கரையில் உள்ள சீரணி அரங்கில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியாகப் பரிணாமம் பெற்றது வன்னியர் சங்கம். டாக்டர் ராமதாஸால் நிறுவப்பட்ட இந்தக் கட்சி இன்று வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக வளர்ந்து நிற்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் 29ஆவது ஆண்டு விழாவை அக்கட்சியினர், இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொடியேற்றுகிறார்
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் ராமதாஸ்.
இன்று மாலை வேலூர் மேல்மொணவூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் 29ஆவது ஆண்டு தொடக்கவிழா மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூட சட்டப்படியான நடவடிக்கை எடுத்ததற்கான பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் ராமதாஸ்.
பாமக-வுக்கு வயது 29 பாமக-வுக்கு வயது 29 Reviewed by நமதூர் செய்திகள் on 05:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.