பிளாஸ்டிக்கில் பெட்ரோல்!

பிளாஸ்டிக்கில் பெட்ரோல்!

ஹைதராபாத்தில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் பிளாஸ்டிக்கில் எரிபொருள் தயாரித்து அசத்தியுள்ளனர். 45 வயதான சதீஷ், தனது மனைவி ஷீலாவுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு மேலாக, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடிய எரிபொருளாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் போது, அது நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளுக்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. அதைதான் நாம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்று அழைக்கிறோம். எனினும், தொடர்ந்து மறுசுழற்சிக்கு உட்படுத்தும்போது, அதனுடைய எடை அதிகரித்து, பண்புகள் குறைகின்றது. இதற்கடுத்த நிலையைத்தான் 'இறந்த' பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக்கின் இறுதி வாழ்க்கை என்று கூறுவார்கள் என்று சதீஷ் கூறியுள்ளார்.
இருப்பினும், ஒரு பொருளின் காலம் முடிந்துவிட்டது என்று பலரும் நினைக்கும் ஒரு பொருளில், சதீஷ் துவக்கத்தை பார்த்துள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை குழி தோண்டி, மூடுகின்றன. இது இயற்கைக்கு ஆபத்தானது. ஏனெனில், இந்த பிளாஸ்டிக் சிதைவு அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். இதனால்தான் அதை எரிபொருளாக பயன்படுத்தும் யோசனை வந்தது.
பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் சதீஷ் யோசனை தனித்துவமானது. இருப்பினும், வழக்கமாக பயன்படுத்தப்படும் பைரோலிசிஸ் (ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் தெர்மோகேமிக்கல் சிதைவு) செயல்முறையில் தான் செய்யப்படுகிறது. டி-பாலிமரைசேஷன் என்ற செயல்முறையை பயன்படுத்துவதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.
டி-பாலிமரைசேஷன் செயல்முறை பாதுகாப்பானது, கட்டுப்பாடானது மற்றும் மாசுபாடு விளைவிக்காத ஒன்று. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிபி) இந்த செயல்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கு, புகையை வெளியே அனுப்புவதற்கு புகைபோக்கி இல்லை, ஏனெனில் முழு பிளாஸ்டிக்கும் இங்கு மாற்றியமைக்கப்படுகிறது. செயல்முறையின் உப பொருட்கள் கூட பயன்படுத்தப்பட கூடியவை.
2013 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் ஒரு 'குப்பை தீவு' பற்றி படிக்கும்போது, முதன் முதலில் இந்த யோசனை வந்தது. நான் என்னுடைய சொந்த டி-பாலிமரைசேஷன் இயந்திரத்தில் வேலை செய்தேன். ஏனெனில், இது இந்தியாவில் அதிகளவில் இல்லை. முதலில் சிறிய அளவிலிருந்து தொடங்கி, பல எதிர்விளைவு சோதனைகளை செய்தேன்.
ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில் தனது இயந்திரங்களை பெரிய வளாகத்திற்கு மாற்றினேன். மேலும் ஒரு பெரிய அணு உலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டேன். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் செயல்முறையை தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும் 13 முதல் 15 டன் பிளாஸ்டிக்களை செயல்முறைக்கு உட்படுத்தி, 250 முதல் 300 லிட்டர் டீசல், 100 லிட்டர் அதிவேக டீசல் மற்றும் 50 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக்கை மற்றொருவரிடம் இருந்து வாங்கும் சதீஷ் எரிபொருளை மொத்த விற்பனை, தொழிற்சாலைகள், மற்றும் உள்ளூர் மக்களிடம் விற்கிறார்.
மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அரசு, உண்மையில் அதிக தீங்கு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் தொழிற்சாலைகளை கவனிக்க மறந்துவிடுகிறது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விட ஒரு தொழிற்சாலைதான் அதிக கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு லோக் சபாவில், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனில் தவே, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுகின்றன. அதில் 6,000 டன்கள் சேகரிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன என்று கூறினார். சில அறிக்கைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளில் 22 முதல் 28 சதவிகிதம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கிறது என சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சதீஷின் மனைவி ஷீலா கூறுகையில், நாங்கள் லாப நோக்கி செயல்படாமல் சுற்று சூழலை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினருக்கு நல்ல சுகாதாரத்தை கொடுக்கவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். புதிய தொழில்முனைவோர்களுடன் எங்கள் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்கில் பெட்ரோல்! பிளாஸ்டிக்கில் பெட்ரோல்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.