புதிய சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

புதிய சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

ஓ.பி.சி. தொடர்பாக அரசியலமைப்பின் 123ஆவது சட்டத்திருத்த மசோதா குறித்து நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில ஆளும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்துக்கு (NSEBC) அரசியலமைப்பு தகுதி வழங்குவதற்காக 123ஆவது திருத்த மசோதா குறித்து, எதிர்க்கட்சி மற்றும் சில தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் (NDA) அடங்கிய தேர்வுக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட தேர்வுக்குழுவைச் சேர்ந்த ஏழு பேர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அதிமுக, திமுக மற்றும் என்.டி.டி.ஏ. கூட்டணி கட்சியான சிவசேனா ஆகியோரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிற்போக்கு வகுப்புகள் என்று அழைக்கப்படுவது, மத்தியில் ஆட்சி புரியும் பாஜக-வுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால், இது ஒரு அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த மசோதா குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுவது அவசியமாகும். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கான மசோதாவில் போதிய உடன்பாடு இல்லாததால், தற்போது இதில் இரண்டாவது திருத்தம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒட்டுமொத்த ஓ.பி.சி. சமூகத்தையும், அரசாங்கம் ஏமாற்ற முயற்சி செய்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்பு அந்தஸ்தை விரும்பினோம். ஆனால், அதில் தெளிவு இல்லை. மேலும், அந்தக் குழுவின் தலைவருக்கு என்ன தகுதி இருக்கும் என்பதற்கான எந்தத் தெளிவும் இல்லை. இதில், மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் பெருமளவில் உள்ளன என்று பிற்படுத்தப்பட்டோர் சமூக வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் பெயரை மாற்றி சமூக மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான தேசிய ஆணையம் என்பதற்கு, கடந்த மார்ச் மாதம் அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது. இந்த ஆணையத்தில் ஒரு பெண் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் உட்பட குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. மேலும், ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஓ.பி.சி. சமூகத்திலிருந்தே வர வேண்டும் என்றும் விரும்புகின்றனர். எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு, ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த சிவசேனா மற்றும் ஷிரோமணி அகலி தள் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநில பட்டியல்களில் இருந்து ஓ.பி.சி-யைச் சேர்ப்பது அல்லது நீக்குவது என்பது மாநிலக் கமிஷன்களின் அதிகாரத்தைக் குறைக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் மழைக்காலக் கூட்டத்தில், இந்த மசோதா தொடர்பாக முன்னேற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி-யில் கிடைத்த பெரும்பான்மை வெற்றியையடுத்து, மோடி அரசு இந்த புதிய ஆணைக்குழுவைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
புதிய சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்! புதிய சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.