தலைவர்கள் கருத்து!

தலைவர்கள் கருத்து!

முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையனைத் தவிர மொத்தமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு தலைவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
வெற்றிவேல் எம்.எல்.ஏ.
நாங்கள் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. தகுதி நீக்கத்துக்கு சபாநாயகர் சொல்லும் காரணம் ஏற்கத்தக்கதல்ல.கொறடாவின் உத்தரவு சட்டப்பேரவைக்கு மட்டுமே செல்லும். எங்களுடைய தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட வுள்ளோம்.நீதிமன்றம் சென்றால், எங்கள் தரப்புக்கு நியாயம் கிடைக்கும்.
வைத்திலிங்கம் எம்.பி.
சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியது சரியான நடவடிக்கையே. இதனால் கட்சிக்கு பிளவோ, பாதிப்போ கிடையாது. உரிய நேரத்தில் விளக்கம் அளித்து இருந்தால் சபாநாயகர் ஏற்றிருப்பார்.
துரைமுருகன்
சட்டப்பேரவைக்கு உண்டான பாரம்பர்யத்தை சபாநாயகர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். ஒருதலைபட்சமாகச் செயல்படும் சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நியாயமாக வழிநடத்துவார்? எடப்பாடி பழனிசாமியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். சபாநாயகர் மீது வைத்திருந்த நம்பிக்கை சரிந்துவிட்டது.
ஜி.ராமகிருஷ்ணன்
தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறினார். முதல்வருக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற நோக்கத்துடன் பதவியை பறித்திருப்பது சட்டப்படி சரியானதல்ல ஜனநாயக விரோதமானது.
முத்தரசன்
18எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்ததால் தகுதி நீக்கம் செய்தது சரியான நடைமுறையல்ல. எடப்பாடி பழனிசாமி அரசு எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டு தங்கள் அரசுக்கு பெரும்பான்மை இருப்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது.
திருமாவளவன்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால் தயாராக இருக்கிறார்கள் என்பது, தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் வரை தற்போதைய ஆட்சியை பாஜக காப்பாற்றும். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலை பொறுத்தவரை நிரந்திர ஆளுநரை நியமிக்க வேண்டும்.
திருநாவுக்கரசர்
சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே தகுதி நீக்க உத்தரவு செல்லும். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சபாநாயகரை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். கட்சித்தாவல் நடவடிக்கை என்றால், 18 பேர் எந்தக் கட்சிக்குத் தாவினர். தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ள நிலையில் 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசைக் காப்பாற்றிக்கொள்ள செய்யப்பட்ட தந்திர நடவடிக்கை.
தமிழிசை சவுந்தரராஜன்
தீவிர ஆலோசனைக்குப் பிறகே சபாநாயகர் சட்டப்படி முடிவெடுத்திருப்பார்.
புகழேந்தி (தினகரன் ஆதரவாளர்)
நிர்பந்தம் காரணமாகவே தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமான செயலை சபாநாயகர் எடுத்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்.
பீட்டர் அல்போன்ஸ்(காங்கிரஸ் மூத்த தலைவர்)
கட்சித் தாவல் தடை சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவில் எந்த சட்டமன்றமும் நடைபெறாது.
கே.ஆர்.ராமசாமி(காங்கிரஸ் கட்சயின் சட்டமன்றத் தலைவர்)
மக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஏற்றக் கொள்ளவே முடியாது.
சீமான்
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. மேலும், இது எதிர்பார்த்த நடவடிக்கை தான்.
தலைவர்கள் கருத்து! தலைவர்கள் கருத்து! Reviewed by நமதூர் செய்திகள் on 00:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.