மருந்துகள் விற்பனை மந்தம்!

மருந்துகள் விற்பனை மந்தம்!

ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்தப்பட்டதால் மருந்துகள் சில்லறை விற்பனை சந்தையின் வளர்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அமைப்பு சார்ந்த மருந்துகள் சில்லறை விற்பனை சந்தையின் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதம் சரிவடைந்து மந்த நிலையில் இருந்துள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதன் விளைவுகளாலே மருந்துகள் சில்லறை விற்பனை சந்தை மந்த நிலையில் இருந்துள்ளது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் மருந்துகளின் சில்லறை விற்பனை முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த மந்த நிலை தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து குவிண்டைல்ஸ் ஐ.எம்.எஸ் நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. மருந்துகள் விநியோகிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று வேதியியல் நிபுணர்களும், விநியோகிப்பாளர்களும் கூறுவதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி-யால் அவர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஜி.எஸ்.டி-க்கு ஏற்ப இத்துறை தயார் செய்யப்படாததே இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மருந்துகள் விற்பனை மந்தம்! மருந்துகள் விற்பனை மந்தம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.