வங்கிகளில் பறிபோகும் வேலைவாய்ப்பு!

வங்கிகளில் பறிபோகும் வேலைவாய்ப்பு!

தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால் வங்கித் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவிகிதம் அளவிலான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக சிட்டி குரூப் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்
இந்தியாவைச் சேர்ந்தவரும் அமெரிக்காவின் வங்கியாளருமான விக்ரம் பண்டிட் இந்திய வங்கித் துறையில் தானியங்கிமயம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வேலைவாய்ப்புகள் குறைந்துவருவதாக புளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் வங்கியில் தினசரி ‘பேக் ஆபீஸ்’ பணியில் ஈடுபடுவோர் தங்களது வேலையை இழக்கும் சூழல் உள்ளது. இதன்படி அடுத்த ஐந்து வருடங்களில் இந்திய வங்கித் துறையில் சுமார் 30 சதவிகித வேலைவாய்ப்புகள் காணாமல் போகும்” என்று கூறியுள்ளார்.
விக்ரம் பண்டிட் அமெரிக்காவின் ஓரோஜென் குரூப் என்ற முதலீட்டு நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இதற்கு முன்னர் 2007-12ஆம் ஆண்டு காலகட்டத்தில் சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு விக்ரம் பண்டிட் பெரிதும் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அமெரிக்காவிலும் வங்கித் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துவருகின்றன. 2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் 30 சதவிகித வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7,77,000 வேலைவாய்ப்புகளும், ஐரோப்பாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளும் பறிபோகும்” என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியின் சி.ஒ.ஒ. டாம் மாண்டாக் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் பறிபோகும் வேலைவாய்ப்பு! வங்கிகளில் பறிபோகும் வேலைவாய்ப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 00:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.