அண்ணா பிறந்தநாளில் 10 வருட ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!

சென்னை: அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 வருடம் கழிந்த ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய கோரி மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தத முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிகளின்படி, தவறு செய்து சிறையில் இருப்பவர்கள் அவர்கள் திருந்துவதற்கான ஒரு வழிமுறையாக நாட்டில் முக்கியமான ததைவர்களின் பிறந்த நாள் விழா, நாட்டின் முக்கியமான விசேஷமான நாட்களில் சிறையில் இருப்பவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம்.

அதை போன்று தான் தமிழகத்திலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க ஆட்சியில், 1992ல் 230 ஆயுள்தண்டனை கைதிகளும் மற்றும் 1993ல் 132 ஆயுள்தண்டனை கைதிகளும் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில், 2007ம் ஆண்டில் 16 ஆயுள் தண்டனை கைதிகளும் , 2008ம் ஆண்டில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளும், 2009ம் ஆண்டில் 10 ஆயுள் தண்டனை கைதிகளும் மற்றும் 2010ம் ஆண்டில் 13 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று ஒவ்வோரு ஆண்டும் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு ஆயுள் தண்டனை கைதிகளை தொடர்ச்சியாக விடுதலை செய்து வருகிறது. தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு இந்த நடைமுறை பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், அறிஞர் அண்ணாவின் 106 வது பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழக அரசு 10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் பேரா.மார்க்ஸ், வழக்கறிஞர் ஷாஜஹான் வரவேற்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,  தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுசெயலாளர் ஹாலித் முகம்மது, எஸ்.டி.பி. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி,  அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனிபா, தமிழ் தேச மக்கள் கட்சியின் தலைவர் புகழேந்தி, ஐ.என்.டி.ஜே.வின் துணைத்தலைவர் முகம்மது முனீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா பிறந்தநாளில் 10 வருட ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்! அண்ணா பிறந்தநாளில் 10 வருட ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.