மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வகுப்புவாதத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு - எஸ்.டி.பி.ஐ
சென்னை: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்வி வகுப்புவாதத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- சங்க்பரிவாரின் பிரித்தாளும் கொள்கைக்கு கிடைத்த ஆதரவு குறைந்து வருவதை இடைத்தேர்தல் முடிவுகள் எடுத்தியம்புகின்றன. மதச் சார்பற்ற கொள்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உத்தரபிரதேச மாநில இடைத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. மக்களுக்கு வெறுப்பு தேவையில்லை, வளர்ச்சிதான் தேவை. வகுப்புக் கலவரங்களுக்கு பதிலாக வேலையும், வாழ்வதற்கான வாய்ப்புகளுமே தேவைப்படுகிறது. அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் ஆகியோரின் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். தோல்வியை பா.ஜ.க ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மையை அவர்களால் மூடிமறைக்க முடியாது. வளர்ச்சி குறித்து வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த மோடி வாக்காளர்களுக்கு எதிராக செயல்படுகிறார். மக்கள் வகுப்புவாத செயல் திட்டங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுப்படுத்துகின்றன. வகுப்புவாத பிரச்சாரம், வகுப்பு மோதல்களால் பா.ஜ.கவில் மக்கள் விரோத கொள்கைக்கு திரைபோட முடியாது. நாட்டை மத அடிப்படையில் பிரிக்கும் உண்மையை புரிந்துகொள்ளாமல் ஆட்சிக்கு வந்த பிறகு லவ் ஜிஹாத், கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை மட்டுமே இந்துத்துவாவினர் பரப்புரைச் செய்தனர். இவ்விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடைப்பிடித்த மவுனமும் பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகளாக மாறின. சிலரை விரைவில் வகுப்புவாதத்தை தூண்டி ஆவேசமடையச் செய்யலாம். ஆனால், இறுதி வெற்றி மதச்சார்பற்ற சக்திகளுக்கே கிடைக்கும். வளர்ச்சி குறித்த வாக்குறுதி அளித்து உருவான மோடி அலை ஓய்ந்துவிட்டது. மாமிச வர்த்தகம் மற்றும் மதரஸாவுக்கும் தீவிரவாத தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பரப்புரைகள் மூலம் இந்துத்துவாவினர் மக்களிடம் வகுப்பு துவேச விஷத்தை ஏற்றுகின்றனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இத்தகைய பரப்புரைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வகுப்புவாதத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு - எஸ்.டி.பி.ஐ
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:04:00
Rating:
No comments: