இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் யூதர்கள்!
இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் யூதர்கள்!
டெல்அவிவ்: காஸா மீதான தாக்குதலை விரும்பாத யூதர்கள் சிலர் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சானல் - 2 நடத்திய கருத்துக் கணிப்பில், வாய்ப்பு அமைந்தால் இஸ்ரேலை விட்டு வெளியேறி விடுவோம் என்று 30 சதவீத யூதர்களும் தெரிவித்துள்ளனர். 14 சதவீதம் பேருக்கு என்னச் செய்யவேண்டும் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பல யூதர்கள் இஸ்ரேலிலிருந்து போர் காரணமான அச்சத்தால் லத்தீன் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இதற்கிடையே இஸ்ரேலில் வாழும் சிறுபான்மை அரபியர்களில் 1,500 பேர் இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் யூதர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:09:00
Rating:
No comments: