அமெரிக்காவில் வலுக்கும் மோடி எதிர்ப்பு அலை!
நியூயார்க்: அமெரிக்காவுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஊர்வலம் நடத்த நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2002 ஆண்டு குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இதில், மனித உரிமை மீறப்பட்டுள்ளது தொடர்பாக அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மோடி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டின் நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடுபவர்கள் மோடிக்கு எதிராக ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் ஸ்கொயர் பகுதிக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் போராட்டம் என்று இவர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற அமைப்பினர், மோடிக்கு எதிராக 30ஆம் தேதி சிடிசன் கோர்ட் என்ற நடைமுறையை மேற்கொள்கிறனர். வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிகப்பு கம்பளம் விரிக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த மனித உரிமை அமைப்பின் சிட்டிசன் கோர்ட் நடைபெறுகிறது. இது அமெரிக்கா முழுதும் அன்று லைவ் ஒளிபரப்பாகிறது.
மோடி அமெரிக்கா சென்றடையும் முன்பே அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் குஜராத் சம்பவம் தொடர்பாக சம்மன் அனுப்பியமையும், 21 நாட்களுக்குள் இதுகுறித்து மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்ப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வலுக்கும் மோடி எதிர்ப்பு அலை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:23:00
Rating:
No comments: