டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் – அடுத்தவருக்கும் அனுப்பலாம்.

கார்டே இல்லாமல் பணம் எடுக்கலாம்; வங்கி கணக்கே இல்லாதவர்க்கும் அவரின் மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம். இப்படி ஒரு புதுமையான திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு மூலம் தான் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்; அது போல மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை மாற்றி, ஏடிஎம் கார்டே இல்லாமல் பணம் அனுப்பும், பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், அவருக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் பெயர், முகவரி, மொபைல் எண் இருந்தால் போதும்.
இதை வங்கியில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால், பணம் அனுப்பும் வாடிக்கையாளருக்கு நான்கு இலக்க ‘கோடு’ எண் வழங்கப்படும். அதுபோல, பணம் பெறுவோருக்கு எஸ்எம்எஸ் மூலம் ஆறு இலக்க ‘கோடு’ எண் அனுப்பப்படும். பணம் அனுப்பியபின், அதை பெறுபவர், வங்கியின் எந்த ஏடிஎம்மிலும் போய் பணம் எடுத்து கொள்ளலாம். அப்போது, தன் மொபைல் எண், எஸ்எம்எஸ்.சில் கிடைத்த ‘கோடு’ எண் மற்றும் அனுப்பிய தொகையை பதிவு செய்தால் உடனே பணம் கிடைக்கும்.
இதேபோல, வாடிக்கையாளர் தன் வங்கி கணக்கில் இருந்து கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம். இதே வழிமுறையை பின்பற்றி, ‘கோடு’ எண், மொபைல் எண் பதிவு செய்து பணம் எடுக்கலாம். ‘ஏடிஎம்களில் பணம் எடுப்பது தான் இப்போது பிரபலமாக உள்ளது. ஏடிஎம்ஐ பயன்படுத்தாதவரே இல்லை எனலாம். அதனால் தான், எந்த வங்கியிலும் கணக்கு இல்லாதவர்களுக்கு பணம் அனுப்ப நாங்கள் இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்’ என்று வங்கி அதிகாரி ஒருவர் கூறினர்.


Read more: http://indru.todayindia.info/take-money-from-the-atm-without-a-debit-card/#ixzz3Cycfk85L
டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் – அடுத்தவருக்கும் அனுப்பலாம். டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் – அடுத்தவருக்கும் அனுப்பலாம். Reviewed by நமதூர் செய்திகள் on 21:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.