பெரியாரின் திராவிட இயக்க மண்ணில் ஆரிய பி.ஜே.பி. காலூன்ற சூழ்ச்சிகள்-திட்டங்கள்! அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா

  • சென்னை, நவ.19_ தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் இவற்றால் பக்குவப்படுத்தப்பட்ட திராவிட இயக்க மண்ணில் ஆரிய பி.ஜே.பி. தன் கால் பதிக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு (18.11.2014) அம்பலப்படுத்தியுள்ளது.


  • பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு ஆங்கிலே யர்கள் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். இப்பிரிவினைக் கோட்பாட்டின் மூலம் தற்போதைய பா.ஜ.க. அரசு, மத ரீதியாக மக்களைப் பிரித்து ஒற்றுமையைச் சிதைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. தற்போது சமூகநீதிக் களமான தமிழகத்தில் கால் பதிக்க கங்கணம் கட்டிக்கொண் டிருக்கிறது.  தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தின் வலிமையால், சுதந்திரத்திற்குப் பிறகு மதவாத சக்திகளை வேரோடு பிடுங்கி எரிந்ததுமல்லாமல், திராவிட கட்சிகளின் தாக்கம் இன்னும் நூற்றாண்டு வரை இருக்கும்படி செய்துவிட்டது.  ஆனால், மத்தியில் பிரித்தாளும் கொள்கையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜக, தற்போது தமிழகத்திலும் தனது பிரித்தாளும் கொள்கையை களமிறக்கத் தொடங்கியுள்ளது.
  • ஆரியர்களின் வருகை
  • ஆரியர்கள் வந்த பிறகு, வட இந்தியாவில் பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தினார்கள். தென் இந்தியாவிலும் தங்கள் பலத்தைக் காண்பித்து வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்கள். இதற்கான எதிர்ப்பு வடக்கில் தொடங்கினாலும், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களின் மறைவிற்குப் பிறகு ஆரிய எதிர்ப்பு வலுவிழந்து விட்டது அல்லது அந்த எதிர்ப்பு சக்திகள் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு அடிபணிந்து விட்டன.  ஆனால், தமிழகத்தில் அப்படி அல்ல; பெரியாரின் திராவிடர் கழகத்தின் தாக்கம் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக நீடித்து வருகிறது,
  • முக்கியமாக திராவிட கருத்தாழமிக்க தமிழகத்தை மத்தியில் பலம் வாய்ந்த ஆரியக்கூட்டம் ஒரு வகை பகைமைப் பார்வையே பார்த்து வந்தது. இதன் கார ணமாகத்தான அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்றார். இதற்குக் காரணமும் உண்டு. ஆரியர்களின் விரோத மனப்பான்மை எந்த அளவிற்கு ஊறிவிட்டது என்றால், தமிழ் மொழியை ஒழிக்கக் கங்கணம் கட்டி, இந்தியை முழுமையாகத் திணிக்கும் சூழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வந் தார்கள். பாஜகவின் ஆட்சியில் இந்தி மொழித் திணிப்பு மேலும் தீவிரமாகியுள்ளது.
  • இடையில் புகுந்தது ஆரிய இனம்!
  • இந்துத்துவ சக்திகளின் கூறான வேதங்கள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப் பட்டவை என்ற கட்டுக்கதைகள் செல்லுபடியாக வில்லை. சமீபத்திய மனித இன இடப்பெயர்வு குறித்த ஆய்வு ஒன்றில் இந்திய தீபகற்பத்தில் 2000 ஆண்டுகளுக்கு இடையே பெரிய அளவில் அந்நிய இனம் புகுந்தது. இதற்கு முன்பே பன்னெடுங்காலமாக இந்திய தீபகற்பத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு ஓர் இனம் வாழ்ந்து வந்தது என்ற உண்மை ஆரியர்கள் சமீபத்தில் இந்தியாவிற்குள் புகுந்த வந்தேறிகள்தான் என்பதை உறுதி செய்துள்ளது. இதிலிருந்தே வேதங் கள் என்னும் கட்டுக்கதைகள்மூலம் தன்னை இந்த மண்ணிற்குச் சொந்தகாரர்கள் என்று போலியான ஒரு தோற்றத்தை ஆரியக் கூட்டம் உருவாக்கிய சூழ்ச்சி தெரிய வரும். அதேநேரத்தில், இப்பொய்யை தற் போதைய அரசு வரலாற்றுப் பாடங்களில் மாற்றங்களைச் செய்து உண்மையாக்க முயல்கிறது.
  • வட மற்றும் தென்மாநிலங்களில் பாஜகவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு நடைமுறை அனுபவம் கிடைத்தது. அதாவது வடமாநிலங்களில் எளிதில் மத ரீதியாக மக்களை ஏய்த்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்களுக்குத் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது செல்லுபடியாகாது. ஆகவேதான், மோடி ஊழல் அற்ற என்ற ஒரு பிரம்மையை தமிழகத்தை மனதில் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
  • திராவிட கட்சிகள்மீது அவதூறு பரப்புதல்
  • தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியைக் குறித்து முதலில் மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், தமிழக பாஜகவினருக்கு கடுமையான சில உத்தரவுகளைப் போட்டிருக்கின்றனர் மோடியும், அமித்ஷாவும்.
  • முக்கியமாக தற்போது முதல் குறி திராவிட சிந்தனையை உடைப்பது தான் அவர்களின் பணி. இதற்காகவே முதலில் ஆரிய_ திராவிட என்னும் கோட்பாட்டை உடைத்து திராவிட சிந்தனைமீது பழிதூற்றும் வகையில் பல்வேறு கட்டுக்கதைகளைத் தயார் செய்து, மக்களிடையே பரப்புவது, அதாவது பாரம்பரிய இந்திய மரபை ஆங்கிலே யர்கள் சிதைத்தனர். அதைத் திராவிட சிந்தனை கொண்டு கட்சிகள் இன்றும் காப்பாற்றி வருகின்றனர் என்ற பொய் யான பிரச்சாரம் உள்ளூர மேற்கொள் ளப்படுகிறது.
  • ரஜினியை இழுக்க முயற்சி
  • அதற்கேற்றாற்போல் பிரபல திரைப்பட நடிகர்களைத் தங்களின் பக்கம் இழுக்க முயற்சி செய்து வரு கிறது. இதன் முதல்படியாக ரஜினி காந்தை தங்கள் வலையில் சிக்க வைக்க முழு முயற்சி எடுத்து வருகிறார்கள். பாஜக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதிக்க முடியாது. இதன் காரணமாக, 2014 இல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பார்த்தது, இருப் பினும் அதன் வாக்கு வங்கி எதிர் பார்த்த அளவிற்குக் கூடவில்லை. தற்போது முக்கியப் பிரச்சினை யான மீனவர் சிக்கலை பாஜக கையில் எடுத்துள்ளது. ஒருபுறம் ராஜபக்சே விற்கு மத்திய அரசு முழுமையாக ஆத ரவு தரும் நிலையில், தமிழக மீனவர் களின் சிக்கலை எப்படி தீர்க்கப் போகி றார்கள் என்பது தமிழக மக்களின் மத்தியில் மிகப்பெரும் கேள்வியாக எழுகிறது. அதேநேரத்தில், ராஜபக்சே வுடன் சுமூகமாகப் பேசி, மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது போன்ற ஒரு மாயையையும் தமிழக பாஜக கிளப்பி வருகிறது.
  • அதேநேரத்தில், தமிழகத்தில் திராவிட சிந்தனையை ஒழிக்க பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டே எதிர்ப்பு அலையை உருவாக்கி வருகிறது. இதன் முன்னேற்பாடாகத்தான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முக்கிய பதவியில் அமர வைத்து, சமூகநீதிக்கு ஆதரவான அதேநேரத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு  உண்மையான எதிரிகள் நாங்கள்(பாஜக) அல்ல என்று காட்டுவது போன்ற ஒரு மாயையை உருவாக்கிவிட்டது.
  • மாயை உருவாக்குகிறார்கள்   மேலும் பாஜகவின் இந்துத்துவா சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோன்ற ஒரு மாயையை உருவாக்க தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர், காஞ்சி சங்கராச்சியாருடன் நல் லுறவை ஏற்படுத்திக் கொண்டது போன்ற ஒரு போலியான மாயையை உருவாக்குவது மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூடாரத்தில் அதிகப்படியான பிற் படுத்தப்பட்ட மக்களை  இணைக்கச் செய்வது போன்ற சூழ்ச்சிகள் அரங் கேறிவருகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா (18.11.2014) செய்தி வெளியிட்டுள்ளது.
  • சமீபத்தில் ரகசியமாகத் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா தியாகராயர் நகரில் மதம் தொடர்பான மடம் ஒன்றிற்குச் சென்று வந்தார். அங்கு ஆர்.எஸ்.எஸ் தமிழகப் பிரமு கர்கள் பலர் அவரைச் சந்தித்தாக தெரிகிறது. அமித்ஷா வந்து சென்ற பிறகு, நடந்த சம்பவங்கள் பாஜகவின் சூழ்ச்சியை விரைவில் வெளியே கொண்டு வந்துவிட்டன. அமித்ஷா சென்னை வந்து சென்ற சில நாள்களில், ஆர்.எஸ்.எஸ். தமிழ கம் முழுவதும் ஊர்வலம், போராட் டம், பொதுக்கூட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை தமிழகத்தில் மறைமுகமாக இயங்கிக்கொண்டு இருந்த ஒரு சக்தி தற்போது வெளிப் படையாகக் களமிறங்கியுள்ளது _ தமி ழகத்தில் திராவிட சிந்தனையை வேரில் இருந்து அழித்தொழிக்கும் வகை யில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பதவிகளைக் கொடுத்து, அவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி களமிறங்கும் பாஜகவின் சூழ்ச்சி எந்த அளவிற்கு பலன் தரும் என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

  • Read more: http://viduthalai.in/e-paper/91414.html#ixzz3JVqoGyNg
பெரியாரின் திராவிட இயக்க மண்ணில் ஆரிய பி.ஜே.பி. காலூன்ற சூழ்ச்சிகள்-திட்டங்கள்! அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா பெரியாரின் திராவிட இயக்க மண்ணில்  ஆரிய பி.ஜே.பி. காலூன்ற சூழ்ச்சிகள்-திட்டங்கள்!  அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா Reviewed by நமதூர் செய்திகள் on 03:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.