மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து இன்று பெரம்பலூரில் SDPI கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வாக்கும் மோடி அரசின் கொள்கைகளை கண்டித்தும், நாட்டை பிளவுபடுத்தும் வகுப்புவாத அரசியலை கண்டித்தும் SDPI கட்சியின் சார்பாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (04/11/2014) மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முஹமது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர்கள் ஹிதாயதுல்லா, சித்தீக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் முஹமது ரபீக்  தனது உரையில்; 
இந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் விதமாக பொருளாதாரக் கொள்கைகளை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி அரசு கடைபிடித்து வருகிறது.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்களை வளர்ப்பதற்கு பதிலாக, பல்வேறு சலுகைகளுடன் அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நாட்டின் வளங்களை தாரை வார்க்கும் செயலை முன்னெடுத்து வருகிறது.
அந்நிய, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் அரசின் ஆதரவு, தனியார் நிறுவனங்களுக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும், தொழிற்சாலைகள் நிறுவி உற்பத்தியைப் பெருக்கவும் முன்வரும் தனிநபர்களுக்குத் தரப்படும்போது மட்டும்தான் உற்பத்திப் பெருக்கமும், அதன் தொடர் விளைவுவாகப் பரவலான வேலைவாய்ப்பு ஏற்படுவதும் சாத்தியமாகும்.
போலியான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி நாட்டின் வளங்களை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
மத்தியில் பாஜக பொறுப்பேற்றது முதல் சமூகங்களுக்கிடையே பிரிவினையை தூண்டும் விதத்தில் அறிக்கைகளை, பேச்சுக்களை அக்கட்சியின் எம்பிக்கள், தலைவர்கள் தொடந்து செய்து வருகின்றனர். போலியான பிரச்சாரங்கள் மூலம் வன்முறைகளையும், சிறுபான்மை விரோத அரசியலையும் பாஜக மேற்க்கொண்டு வருகிறது. இதன் மூலம் பிரச்சனைகளை உருவாக்கி நாட்டை பிளவு படுத்தும் செயல் திட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த தர்ணா போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் அயுப் ஹஜ்ரத் அவர்கள் நன்றி கூறினார். 





மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து இன்று பெரம்பலூரில் SDPI கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து இன்று பெரம்பலூரில் SDPI கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 06:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.