அறிந்து கொள்வோம்! வக்ப் சொத்துக்கள்...

ஏழை மக்களுக்காகவும், இறை பணிக்காகவும், சமூக நற்காரியங்களுக்காகவும் வசதி படைத்தவர்கள் தங்கள் சொத்தை தனமாக கொடுப்பதே வக்ப் எனப்படுகிறது.

இந்திய ரயில்வே, உள்துறைக்கு அடுத்தபடியாக அதிகம் சொத்து உள்ள துறையாக வக்ப் வாரியம் உள்ளது.


இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் சொத்துக்கள் வக்ப் வாரியத்திடம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.2 லட்சம் கோடி. இது அரசின் மதிப்பு. உண்மையான மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் மட்டும் 6694 வக்ப் சொத்துக்கள் உள்ளன. மகாராஷ்டிரா புனே வில் மட்டும் 3,724 வக்ப் சொத்துக்கள் உள்ளன. 

இவ்வளவு பெரிய சொத்துக்கள் உள்ள முஸ்லிம் சமூகம்தான் அதை பயன்படுத்த தெரியாமல், இன்னும் அரசிடம் பிச்சை எடுத்துகொண்டிருக்கிறார்கள். இந்த சொத்துக்களில் 70% ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்பதற்குகூட எந்தவித போராட்டங்களோ, செயல்திட்டங்களோ இஸ்லாமிய சமூகத்திடம் இல்லை. 

குறிப்பாக அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் ஆக்கிரமிப்பு செய்யும் முதல் சொத்தாக வக்ப் சொத்துக்களே உள்ளன. ஏனென்றால் இங்கேதான் யாரும் கேள்விகேட்கமாட்டர்கள் என்று.  

உதாரணமாக சில :
முகேஷ் அம்பானி கட்டியுள்ள மிகப்பெரிய வீட்டின் இடம் 60 கோடி மதிப்புடைய வக்ப் சொத்து ஆகும். அதை வெறும் 16 லட்சத்திற்கு அவரிடம் விற்கப்பட்டது.

பெங்களூர் லால்பார்க் யில் உள்ள இடம் 90 கோடி மதிப்புள்ள வக்ப் சொத்து வெறும் 1 கோடிக்கு விற்கப்பட்டது.

பெங்களூர் ஒரு தனியார் ஹோட்டல் கட்டப்பட்டுள்ள இடம் 500 கோடி மதிப்புடையது. அதை வெறும் 12,000 வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்தியாவிலே அதிகமாக ஹைதராபாத் பகுதியில் அதிகம் வக்ப் சொத்துக்கள் உள்ளன. இங்கு அரசின் பல திட்டங்களுக்கும் வக்ப் நிலம் ஆக்கிரமிக்கபட்டுள்ளது. ஒரு ரூபாய் கூட வக்ப் வாரியத்திடம் கொடுக்காமல்.

திருச்சியில் 30,000 சதுர அடி கொண்ட இடம் கலைஞர் அறிவாலயம் கட்ட குறைந்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஏராளமான வக்ப் சொத்துக்கள்  மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. (டெல்லியில் 113 சொத்துக்கள், உ.பி.யில் 286 சொத்துக்கள், கர்நாடகாவில் 67 சொத்துக்கள்)

இஸ்லாமிய சமூகம் முன்னேற வேண்டுமானால் ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்டு கல்வி நிலையங்கள், கல்வி உதவி தொகைகள், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள், தொழிற் கடன்கள், என பல முன்னேற திட்டங்களை எந்த அரசையும் எதிர்ப்பார்க்காமல் நாம முன்னின்று செய்யலாம்.

இஸ்லாமிய சமூகம் இதற்காக போராட வேண்டும். வக்ப் சொத்துக்களை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
அறிந்து கொள்வோம்! வக்ப் சொத்துக்கள்... அறிந்து கொள்வோம்!  வக்ப் சொத்துக்கள்... Reviewed by நமதூர் செய்திகள் on 21:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.