நினைவாற்றல் மிகுந்த அதிசயச் சிறுவன்!

கரூர் மாவட்டம், கரூர் வட்டம், புலியூர் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சார்ந்தவர் கே.என்.பெரியசாமி.
இவரது புனைப்பெயரை கூறினால் அப்பகுதி மக்களுக்கு தெரியும். புனைப்பெயர் ரோசாப்பூ பெரியசாமி என்றழைக்கப்பட்டு வருகிறார். இவரது மனைவி பூங்குறளி, இவர் கரூர் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பெரியசாமியின் சொந்த தொழில் விவசாயம் ஆகும். மேலும், கடந்த 2011ல் புலியூரில் கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். இவர்களது மகன் பெ.சுகனேஸ் (வயது 4 ¾).



இச்சிறுவன் கரூர் அருகே உள்ள வேட்டமங்கலம் ராசமா மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறான். இந்நிலையில், இச்சிறுவன் 200 உலக நாடுகளின் கொடி எது என கண்டுபிடித்து உடனே சொல்லும் நினைவாற்றல் படைத்தவன் ஆவான். மேலும், 30 திருக்குறளையும், 80 உலக தலைவர்களின் பெயர்களையும் கூறுவதோடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், அதன் தலைநகரங்களையும், மாநில தலைவர்களின் பெயர்களையும் கூறி  பட், பட்டென்று கூறி வருகிறான். இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் கூறி வருகிறான்.

இப்புகழ் பெற்ற சிறுவன் கடந்த 2 வருடங்களாக இவனின் நினைவாற்றல் கூடி வருகிறது. மேலும், இது மட்டுமில்லாமல் இவனின் செயலை பாராட்டி உத்திரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாட்டின் துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் ஆகியோரின் பாராட்டுகளையும் பெற்றுள்ள இந்த சிறுவன் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக்கி காட்டுவதே எனது லட்சியம் என சுகனேஸ்ஸின் தந்தை பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பெ.சுகனேஸ்ஸின் தந்தை பெரியசாமியை தொடர்பு கொள்ள 9944156963
செய்தியாளர் : சி.ஆனந்தகுமார்
நினைவாற்றல் மிகுந்த அதிசயச் சிறுவன்! நினைவாற்றல் மிகுந்த அதிசயச் சிறுவன்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.