வி.களத்தூரில் இஸ்லாமிய நூலகம் அமைக்கப்படுமா?

வரலாற்றை படிக்கமால், 
வரலாறு படைக்க முடியாது  
என்று சொல்லுவார்கள்.

சாதாரண மனிதனையும் மகானாக உயர்த்த, கொடிய மனிதனையும் சிறந்தவனாக ஆக்க, முட்டாளையும் மிகப்பெரிய அறிவாளியாக மாற்ற, 
புத்தகங்களால்தான் முடியும். 
காரல் மார்க்ஸ், புரட்சியாளர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்றவர்களை மாபெரும் மேதைகளாக்கியதில் புத்தகங்களுக்கு தனி இடம் உண்டு. அவர்கள் நூலகத்திற்கு காலையில் முதல் ஆளாக சென்றால் மாலை கடைசி ஆளாகத்தான் வெளியே வருவார்கள். அந்த அளவிற்கு புத்தகங்கள் வாசிப்பதை நேசித்தார்கள்.

திப்பு சுல்தான் தனது திருமண பரிசாக ஹைதர் அலியிடம் கேட்டது என்ன தெரியுமா? உலகில் மிகச்சிறந்த புத்தகங்கள் அடங்கிய நூலகத்தைதான். புத்தகங்களை படித்ததால்தான் அவன் மிகச்சிறந்த வீரனாக, தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஆட்சியாளனாக விளங்க முடிந்தது.

இதுபோன்ற எத்தைனையோ உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். தற்போது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. முக்கியமாக நம் சமூகத்தில், நமது ஊரில். நாம் எல்லோரும் எப்போதும் முகநூல் அல்லது வெட்டி அரட்டைகளில்தான் நமது நேரத்தை செலவு செய்து வருகிறோம்.

அதனால் வி.களத்தூரில் சிறிய அளவிலான நூலகத்தையாவது அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இயக்கசார்பில்லாமல், பொதுவான இளைஞர்களால் தொடங்கப்படவேண்டும். 

மார்க்கம், கல்வி, அறிவியல், சட்டம், பொருளாதாரம், அரசியல் என எல்லாத்துறை சம்மந்தப்பட்ட புத்தகங்களும் சிறிய அளவிலாவது அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்த முயற்சிகளின் மூலம் நமது இளைஞர்கள் கல்வி முன்னேற்றத்தையும், தெளிவான சிந்திக்கும் திறனையும், உண்மையான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

"இன்று அறிவை தேடி நீ ஓடினால், 
நாளை உலகம் உன் நிழலை தேடி ஓடிவரும்".

- வி.களத்தூர் பாரூக்
வி.களத்தூரில் இஸ்லாமிய நூலகம் அமைக்கப்படுமா? வி.களத்தூரில் இஸ்லாமிய நூலகம் அமைக்கப்படுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 20:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.