இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவும் சவூதி!

டெல் அவிவ்: "இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவ சவூதி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இசைவு தெரிவித்துள்ளனர்" என இஸ்ரேலிய தொலைக்காட்சியான சேனல் 2 செய்தி வெளியிட்டுள்ளது.
 இது தொடர்பாக அத்தொலைகாட்சி வெளியிட்டுள்ள செய்தியில் "ஐரோப்பிய அதிகாரிகளுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்களது விமானப்பாதையை வான்வெளித்தாக்குதலுக்காக இஸ்ரேலிய ராணுவத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்பாதையினைப் பயன்படுத்தக் கொடுக்கும் முன் இஸ்ரேல்-ஃபலஸ்தீன் இடையிலான நடைமுறைகளை அவதானித்து அமைதிக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும் எனவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." என்று கூறியுள்ளது.

இரானின் அணு ஆயுத பயன்பாட்டினைக் குறித்து இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக அரபு நாடுகள் கவலையடைந்துள்ளதாகவும், இரானின் அணுஆயுத உற்பத்தியினை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தம் நிறைவேறினால் அரபு பிராந்தியங்களில் உள்ள ஏனைய நாடுகளும் அணுஆயுத தயாரிப்புகளை இரானுக்கு ஒப்பானதாக வளர்த்துக்கொள்ள முனைப்புக் காட்டலாம் எனவும் அரபு தேசங்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
"இரானுடனான பேச்சுவார்த்தை தோல்விடைந்தால் அது மோசமானதொரு அணு ஆயுத ஒப்பந்தமாக இருக்கும்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு முன்னர் தெரிவித்த அதே கருத்தை ஒரு அரேபிய அதிகாரியும் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகள் இஸ்ரேலின் கருத்துக்கு ஒப்பாக கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்த போதும், இரானின் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து ஒரே மாதிரியான அச்சத்தையே அரபுலகும் இஸ்ரேலும் கொண்டுள்ளதென அமெரிக்க மற்றும் அரேபிய அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
செய்தியாளர் -அபூஷேக் முஹம்மத்
இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவும் சவூதி! இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவும் சவூதி! Reviewed by நமதூர் செய்திகள் on 20:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.