மக்கள் தலைவன் திப்பு சுல்தான்!

திப்பு சுல்தான் பற்றி அவர் ஆங்கிலேய காலனியாதிக்கதுக்கு எதிராக போராடியவர். நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர் என்ற அடிப்படையிலேயே நாம் பெரும்பாலும் அறிந்திருப்போம். ஆனால் அவரிடம் மற்றுமொரு மகத்தான சிறப்பு நல்ல நிர்வாகி, சிறந்த ஆட்சியாளன். அவருடைய ஆட்சிகாலத்தில் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அமுல்படுத்தினார். விவசாய, தொழிற்புரட்சியை ஏற்படுத்தினார்.  அதைபற்றி தற்போது அறிவோம்.




திப்பு ஆட்சியின் திட்டங்கள் :
இந்தியாவில் முதல் நவீன ராணுவத்தை உருவாக்கியவர்.

ராணுவத்தில் பணியாற்றிய மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக நிலம் வழங்கினார்.

விவசாயிகள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டார்.

உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் எனப் பிரகடனம் செய்தார்.

மைசூர் அரசில் தலித் மக்கள் நில உடைமையுடையவர்களாக இருந்ததை போல வேறு எங்கும் இல்லை.

ஏழைகளையும், விவசாயிகளையும் எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என்று அரசு அதிகாரிகள் உறுதிமொழி எடுக்க வைத்தார்.

அதிகாரிகள் விவசாயிகளை கூலியின்றி வேலை வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது.

உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்தார்.

பாசன வளத்தை பெருக்கி விவசாயத்தை விரிவு படுத்தினார்.

இரும்பு, தங்கம், நெசவு, பணப்பயிர் உற்பத்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு என பல தொழில்களையும் ஊக்குவித்தார்.

பல தொழிற் நகரங்களை உருவாக்கினார்.

அனைத்து தொழில்களிலும் சாதி, மத வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஈடுபடுத்தினார்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக அரசு வணிக கம்பெனியை துவக்கினார்.

அரசு கஜான நிதியை அதிகரிக்க மது விற்பனையை அனுமதித்த தனது அமைச்சரை கண்டித்து, மக்களின் ஆரோக்கியம்தான் முக்கியம், அரசு கஜான நிரம்புவது அல்ல என்று கண்டித்து அனுமதியை ரத்து செய்தார்.

கஞ்சா உற்பத்தியை தடை செய்தார்.

தேவதாசி முறையையும், விபசாரத்தையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையை தடை செய்தார்.

கசையடி தண்டனையை நிறுத்துவிட்டு மரம் நட்டு 4 அடி வரை வளர்க்க வேண்டும் என்று தண்டனை முறையை மாற்றினார்.

போர் விதிமுறை : அப்பாவி பொதுமக்கள் மீது போர்தொடுக்காதீர்கள்.  பெண்களை கவுரமாக நடத்துங்கள், அவர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைக்கும், முதியோருக்கும் கொடுங்கள் என்று தனது ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக  ஆணை பிறபித்தார்.

எல்லா வேலைவாய்ப்புகளையும் சாதாரண மக்களுக்கே வழங்கினார்.

காலானியாதிக்கதிற்கெதிராக தனது அரசில் உள்ள ஒவ்வொரு மக்களும் போராட வேண்டும் என்று கனவு கண்டார்.

தனது மக்கள் மீது நம்பிக்கை கொண்டு அனைவருக்கும் துப்பாக்கி பயிற்சி அளித்தார்.

இதனால்தான் திப்புவின் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்திருந்தனர். இறுதிபோரில் திப்பு இறந்த செய்தி கேட்டவுடன். தனது வீடு கொல்லையடிக்கப்படும்போது கூட கவலைபடாமல் திப்புவின் உடலை பார்பதற்கு திரண்டு வந்து வணங்கினார்கள். நெஞ்சம் வெடிக்க கதறினார்கள்.

உண்மையான மக்கள் தலைவன் திப்பு சுல்தான்.
மக்கள் தலைவன் திப்பு சுல்தான்! மக்கள் தலைவன் திப்பு சுல்தான்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.