பொய் செய்தியை வெளியிட்ட செய்தித்தாள்!
அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். அப்போது, யாத்ரீகர்கள் இருந்த பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரால் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பல திசைகளிலிருந்தும் குண்டு வந்தபோதும், ஓட்டுநர் சலீம் ஷேக் தைரியத்துடனும், சாதுரியத்துடனும் பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக, அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில், பிரபல குஜராத்தி செய்தித்தாள், பேருந்து உரிமையாளரின் மகனான ஹர்ஷ் தேசாய் என்பவர் தான் யாத்ரீகர்களை காப்பாற்றிய 'உண்மையான ஹீரோ' என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்து மக்களின் உயிரை முஸ்லீம் ஒருவர் காப்பாற்றியதை ஏற்றுக் கொள்ள முடியாததால், யாத்ரீகர்களை காப்பாற்றிய 'உண்மையான ஹீரோ' ஹர்ஷ் தேசாய் என செய்தி வெளியிட்டது.
இந்த குஜராத்தி செய்தித்தாள் 1923 ஆம் ஆண்டிலிருந்து செய்திகளை பதிவிட்டு வருகின்றது. இங்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பதிப்புகளை வெளியிடுகிறது. டெய்னிக் பாக்ஸார் குஜராத்தி என்ற குழு நடத்தி வரும் மற்றொரு குஜராத்தி செய்தித்தாளான , திய்வா பாஸ்கர், செய்தித்தாளிலும் அந்த பொய்யான செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
இந்த போலி செய்தி அதிவேகத்தில் இயங்கும் பல வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் சலீம் ஷேக்கின் தைரியத்தைப் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பாராட்டியபோது, நாட்டின் மதச்சார்பற்ற செய்தியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கோடு மக்கள் மத்தியில் வலம் வரும் 'பாரதீய பத்திரிகை' ஊழலை அம்பலப்படுத்துவதற்கும் உண்மையான ஹீரோவின் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்குமான சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டது.
பேருந்து உரிமையாளரின் மகன், ஹர்ஷ் தான் தாக்குதலின்போது மக்களை காப்பாற்றியது என்று ஒரு செய்தித்தாள் தெரிவிக்கிறது. அதே சமயத்தில் மற்றொரு செய்திதாளில் உண்மையில் சலிம் சந்தேக நபர்களில் ஒருவர் என்று கூறுகிறது. இப்படி போலியாக வெளியிட்ட செய்தியை உண்மையென நிரூபிக்க பேருந்தின் பழைய புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர்.
முக்கிய ஊடகங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் நூற்றுக்கணக்கான போலி செய்தி வலைத்தளங்கள் முளைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் பதிவுகள் ஆயிரக்கணக்கான சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. சுபாஷ் சந்திராவின் ஊடகக் குழுவால் நடத்தப்படும் India.com என்ற செய்தித்தாளிலும் அந்த பொய்யான செய்தி பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், பயங்கரவாதிகள் தாக்குதலின்போது 50 பேர் உயிர்களை காப்பாற்றியது குஜராத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சலீம் ஷேக். இது இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் பற்றி அல்ல. அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றவை. ஏன், நானும் அன்று இறந்து இருக்க கூடும் என சலீம் ஷேக் கூறினார்.
பொய் செய்தியை வெளியிட்ட செய்தித்தாள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:30:00
Rating:
No comments: