மூடப்பட்ட 2,000 ஏடிஎம்கள்: நிஜக் காரணம்!
இந்திய வங்கிகள் தங்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கில் 10 மாதங்களில் சுமார் 2,000 ஏடிஎம்களை மூடியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
2017 மே மாதம் வரையில், வங்கிகள் செயல்பாட்டில் வைத்திருந்த (ஆன்சைட் அல்லது வங்கிக் கிளைக்கு அருகிலுள்ள) ஏடிஎம்களின் எண்ணிக்கை 1,10,116 ஆக இருந்த நிலையில், 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அந்த எண்ணிக்கை 1,07,630 ஆகக் குறைந்துள்ளது. வங்கிகள் தங்களது பல்வேறு செலவுகளைக் குறைத்துக்கொள்ளவே ஆன்சைட் மற்றும் ஆஃப்சைட் ஏடிஎம்கள் பலவற்றை மூடியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக, கனரா வங்கி 189 ஆன்சைட் ஏடிஎம்களையும், 808 ஆஃப்சைட் ஏடிஎம்களையும் மூடியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 108 ஆன்சைட், 100 ஆஃப்சைட் ஏடிஎம்களையும், பஞ்சாப் நேஷனல் பேங்க் 655 ஆன்சைட், 467 ஆஃப்சைட் ஏடிஎம்களையும் மூடியுள்ளன.
மறுபுறம், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஆஃப்சைட் ஏடிஎம்களின் எண்ணிக்கையை மேற்கூறிய 10 மாதங்களில் உயர்த்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கியின் ஆஃப்சைட் ஏடிஎம்களின் எண்ணிக்கை 29,917இல் இருந்து 32,680 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஆன்சைட் ஏடிஎம்களின் எண்ணிக்கை 29,150இல் இருந்து 26,505 ஆகக் குறைந்துள்ளது. “இந்திய வங்கிகள் ஏடிஎம்கள் அமைப்பது மற்றும் அவற்றை மேலாண்மை செய்வது ஆகியவற்றுக்கான செலவுகளைக் குறைத்துக்கொண்டுள்ளன. முன்பெல்லாம் ஏடிஎம் ஒன்றை அமைப்பதற்கு ரூ.5 லட்சம் வரையில் செலவாகும். ஆனால், இப்போது ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலான செலவில் ஏடிஎம்களை அமைத்துவிடுகின்றன” என்று பொதுத் துறை வங்கி ஒன்றின் செயலதிகாரி பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் கூறியுள்ளார்.
மூடப்பட்ட 2,000 ஏடிஎம்கள்: நிஜக் காரணம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:39:00
Rating:
No comments: