லஞ்சம், ஊழல்: இழப்பைச் சந்திக்கும் நிறுவனங்கள்!
இந்திய நிறுவனங்கள் லஞ்சம் மற்றும் ஊழலால் தோராயமாக நான்கு விழுக்காடு வரை விற்றுமுதலை இழக்கின்றதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இதுகுறித்து தாமஸ் ரீட்டர்ஸ் வெளியிட்டுள்ள நிதி குற்றம் தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்திய நிறுவனங்களின் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றங்கள் பெருகியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழலால் ஆசிய பசிபிக் நாடுகள் 3 விழுக்காடு விற்றுமுதலை இழக்கின்றன. உலக நாடுகள் 3.2 விழுக்காடு விற்றுமுதலை இழக்கின்றன. ஆனால் 4 விழுக்காடு வரையில் லஞ்சம் மற்றும் ஊழலால் இந்திய நிறுவனங்கள் தங்களது விற்றுமுதலை இழக்கின்றன.'
ஆசிய பசிபிக் நாடுகள் மற்றும் உலக நாடுகளின் சராசரி அளவைக் காட்டிலும் இந்திய நிறுவனங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் பெருகியுள்ளது என்பதையே இந்த ஆய்வு எடுத்துரைப்பதாக உள்ளது. இந்த சர்வதேச ஆய்வு இந்தியாவில் 120 நிறுவனங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 18 மாதங்களில் 53 விழுக்காடு நிறுவனங்கள் நிதி குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறுகின்றன. இத்தகைய நிதிக் குற்றங்களுக்கு தோராயமாக 3.6 விழுக்காடு வரை தனது விற்றுமுதலை பயன்படுத்தியதாகவும் இந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
லஞ்சம், ஊழல்: இழப்பைச் சந்திக்கும் நிறுவனங்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:15:00
Rating:
No comments: