அரசால் அலட்சியப்படுத்தப்படும் தானிய விவசாயிகள்!
2016-17ஆம் ஆண்டில் பருப்பு வகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்த ஆண்டில் பருப்புகளின் விலை கிலோவுக்கு 100 முதல் 150 ரூபாயாக அதிகரித்தது. அதற்கு அடுத்த ஆண்டுகளில் பருத்தி விதைப்புக்கான பரப்பளவை விவசாயிகள் அதிகரித்துவிட்டனர். பருப்பு வகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, மொசாம்பிக் நாட்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு 3.75 மில்லியன் குவிண்டால் அளவிலான பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய இந்திய அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
இதன் விளைவாகப் பருப்பு விவசாயிகள் மீது தற்போது பல சுமைகள் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 1.5 மில்லியன் குவிண்டால் அளவிலான துவரம் பருப்பை இறக்குமதி செய்ய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விடப் பருப்பின் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் தங்கள் கைகளில் 6 மில்லியன் குவிண்டால் அளவிலான பருப்பை வைத்துள்ளனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, பல்வேறு அரசு ஏஜென்சிகளிடமும் 10 மில்லியன் குவிண்டால் அளவிலான துவரம் பருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு இறக்குமதியின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராக இருந்துள்ளது. 2016 ஜூலை மாதத்தில் பருப்பின் விலை கடுமையாக அதிகரித்த போது, பிரதமர் நரேந்திர மோடி மொசாம்பிக் நாட்டுக்குச் சென்று அங்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தற்போது கூடுதலாக 150,000 டன் பருப்பு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதால் பருப்பு விவசாயிகளின் கையில் இருக்கும் சரக்குகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அரசால் அலட்சியப்படுத்தப்படும் தானிய விவசாயிகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:06:00
Rating:
No comments: