704 கேள்வி கேட்டவர் பெஸ்ட் எம்.பி.யாக தேர்வு!

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எழுகிற விவாதங்கள், பிரச்னைகள், தொகுதி மேம்பாடுகள் என அனைத்து விவகாரங்களிலும் சிறப்பாக செயல்படுவதைக் கண்டு நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும். அதன்படி, நாடளுமன்ற விவாதத்தின்போது மக்கள் பிரச்னை குறித்து அதிகமுறை கேள்வியேழுப்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., தனஞ்செய், நாட்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 792 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் சிறந்த எம்.பி.,யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதியைச் சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத் தொடரின்போது, உள்ளூர் மற்றும் மாநில பிரச்னைகள் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விவகாரங்களை திறம்பட எழுப்பியுள்ளார் மஹதிக். மேலும் கடந்த 3 வருடங்களில் அவர் பல்வேறு விவகாரங்களுக்காக மொத்தம் 704 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவற்றை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அதனுடன் பெருமளவிலான திட்டங்கள் நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் பஞ்சன்கங்கா சூழல் சீர்கேடு, கொங்கன் ரெயில்வே, கிராமப் பகுதிகளில் சாலை கட்டமைப்பு, நகரில் பாலம் கட்டும் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன.
704 கேள்வி கேட்டவர் பெஸ்ட் எம்.பி.யாக தேர்வு! 704 கேள்வி கேட்டவர் பெஸ்ட் எம்.பி.யாக தேர்வு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.