மலேசியா: 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு!

மலேசியா: 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு!

மலேசியாவில் 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்துவந்த பாரிசியன் நேஷனல் கட்சியைப் படுதோல்வி அடைய வைத்து மறுபடியும் ஆட்சியைக் கைப்பற்றினார் முன்னாள் பிரதமர் மகதீர் பின் முகமது.
மலேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் (Barisan Nasional - BN) கட்சி கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மகதீர் முகமது, தலைமையிலான நான்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி 115 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்களே போதுமானதால் மகதீர் உடனே ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டார். இதன் மூலம், பிஎன் கூட்டணி கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
1981லிருந்து 2003 வரை தொடர்ச்சியாக 22 ஆண்டுகாலமாக மகதீர் பின் முகமது பிரதமராகப் பதவி வகித்தார். அப்போதைய உலகம் முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டிருந்த தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்த மலேசியாவை ஆசியாவின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மாற்றினார். அப்போது இவருக்கு வலதுகரமாக செயல்பட்ட நஜிப் ரசாக்கின் ஊழல்களின் அதிருப்தியுற்று பிரதமராகத் தனது பதவி காலத்தை நிறைவு செய்த மகதீர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய நஜிப்பின் ஊழல்கள் கட்டுக்கடங்காமல் போகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
நஜிப்பின் ஆட்சியை வீழ்த்தியே தீருவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு தனது அரசியல் துறவறத்தைத் துறந்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
உலகிலேயே 92 வயதில் பிரதமராகும் நபர் மகதீர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைத்தவுடன் பத்திரிகையாளர்களிடம் மகதீர் பேசுகையில், ஊழல் குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மலேசியா: 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு! மலேசியா: 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.