பாராட்டு மழையில் ரஷித் கான்

பாராட்டு மழையில் ரஷித் கான்

ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற இரண்டாம் தகுதியிழப்புப் போட்டியில் (எலிமினேட்டர்-2) ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை வெற்றி பெறச்செய்தார். இதனையடுத்து தற்போது ரஷித் கான் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்," 20 ஓவர் போட்டிகளில் ரஷித் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது பேட்டிங்கிலும் கலக்கும் சிறந்த ஆட்டக்காரராக மாறியிருக்கிறார்" என்று பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், "ஒரு லெக் ஸ்பின்னராக ஐபிஎல்லில் விளையாடிவரும் அனைத்து லெக் ஸ்பின்னர்களையும் கவனித்து வருகிறேன். அதில் ரஷித் கானின் ஆட்டத்தை கண்டு பெருமைப்படுகிறேன். நாளை அவர் ஆட்டத்தைக் காண ஆவலாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நமது ஹீரோ ரஷித் கானினால், ஆப்கானிஸ்தான் பெருமை கொள்கிறது. எங்கள் நாட்டு வீரர்களின் திறமையை நிரூபிக்கச் சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுத்த என் இந்திய நண்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் சிறப்பு என்ன என்பதை ரஷித் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்குக் கிடைத்த மிகப் பெரும் சொத்து. நாங்கள் அவரை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பாராட்டு மழையில் ரஷித் கான் பாராட்டு மழையில் ரஷித் கான் Reviewed by நமதூர் செய்திகள் on 04:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.