மறைக்கப்படும் சொத்து விவரங்கள்!

மறைக்கப்படும் சொத்து விவரங்கள்!

வங்கி மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகிய இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட அமலாக்கத் துறையினர் மறுத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மாமாவும் கீதாஞ்சலி நிறுவன உரிமையாளருமான மெஹுல் சோக்சியும் தலைமறைவாகிவிட்டார். இவ்விருவருக்கும் எதிராக இந்திய நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளதோடு, இவர்களைக் கைது செய்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இவர்களது சொத்துகளைக் கைப்பற்றி அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் அமலாக்கத் துறையினரும் வருமான வரித் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புனே நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான விஹார் துருவ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மெஹுல் சோக்சி மற்றும் நீரவ் மோடியிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள் குறித்த தகவலை வெளியிடுமாறு அமலாக்கத் துறையிடம் கோரியிருந்தார். ஆனால் இந்த விவரங்களை வெளியிட அமலாக்கத் துறையினர் மறுத்துள்ளனர். மேலும், மெஹுல் சோக்சி மற்றும் நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்த விவரங்களை வெளியிடவும் அமலாக்கத் துறை மறுத்துள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் இவ்விருவரும் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அதற்கு முன்னர் தேவோஸ் நகரில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நீரவ் மோடி இருந்த குழுப் புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறைக்கப்படும் சொத்து விவரங்கள்! மறைக்கப்படும் சொத்து விவரங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.