மத்திய அரசு அலுவலகங்களை முடக்க வேண்டும்: வைகோ

 மத்திய அரசு அலுவலகங்களை முடக்க வேண்டும்: வைகோ

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டுமென்று வைகோ கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் திமுக செயல் தலைவர் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மே 9 ) மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த போது, ”தமிழகம் அழிவை நோக்கிச் செல்ல சமுக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழக மாணவ- மாணவிகளை வெளி மாநிலங்களில் நீட் தேர்வை எழுத அலைக்கழிப்பது. இவ்வாறான அநீதி எந்தக் காலத்திலும் நடைபெற்றதில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு வருகிற 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களிடம் நிலங்களைக் குறைந்த விலையில் பெற்று ஷேல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயு போன்றவை எடுக்கத் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் விட்டு லாப ஈட்டும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
கர்நாடகாவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இதை தடுக்கவோ, உடைக்கவோ முடியாது. அவ்வாறு கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது” என்று கூறினார்.
மேலும் நாகையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், காவிரி பிரச்சனையில் தமிழக மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வரவேற்கத்தக்கது. நம் உரிமையை ஒரு காலம் விட்டுத் தரக்கூடாது. மேலும் மக்களிடம் கொந்தளிப்பு வேண்டும்.
அது வன்முறையாகக் கூடாது. கிளர்ச்சிக்களமாக தமிழகம் மாறாதவரைக் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காது. எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தெலுங்கானாவில் செய்தது போல தமிழகத்திலும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும், மொத்த தமிழகமும் கிளர்ச்சி களமாக மாற வேண்டும். தமிழகத்தில் காவிரி மேலாண்மை அமைய நியாயமான அறப்போராட்டங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசு அலுவலகங்களை முடக்க வேண்டும்: வைகோ மத்திய அரசு அலுவலகங்களை முடக்க வேண்டும்: வைகோ Reviewed by நமதூர் செய்திகள் on 23:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.