நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்!

நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில் நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகுகின்றனர் என டெல்லி போலீஸ் வெளியிட்ட அறிக்கையிலுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் 96.63 சதவிகித பாலியல் பாலத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவருக்கு நன்கு அறிந்தவர்கள் ஆவர். இந்தாண்டின்,ஏப்ரல் மாதத்தில் 578 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் 563 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த ஆண்டில் பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் 15ஆம் தேதி வரை பெண்கள் மீதான 944 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 883 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டில் 2,049 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 2,064 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு தரவுகளின்படி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான், பதினெட்டு வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். டெல்லியில் நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்! நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.