கிராமப்புறங்களில் கிடைக்காத வங்கிச் சேவை!

கிராமப்புறங்களில் கிடைக்காத வங்கிச் சேவை!

இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கப்பெறாமல் இருப்பதால் வருகிற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான அதிர்வலைகள் கிராம மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் அரசின் நலத் திட்ட உதவிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கே செலுத்தும் நடைமுறையை விரிவுபடுத்தினார். இதன்படி, நான்கு ஆண்டுகளில் 31 கோடி மக்கள் வங்கிச் சேவைக்குள் இணைக்கப்பட்டனர். ஆனால், இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் இன்னமும் ஏடிஎம் எந்திரங்களும், போதிய வங்கிக் கிளைகளும் இல்லாமல் உள்ளது. வங்கிச் சேவைக்கான உள்கட்டுமானப் பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
மக்களோ தங்களுக்கு வரவேண்டிய நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். கிராமப்புறங்களில் வங்கிச் சேவை சிறப்பாக இல்லாததால் அடுத்த ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலில் மோடிக்கு எதிரான மனநிலையைக் கிராமப்புற மக்கள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (அகமதாபாத்) இணை பேராசிரியரான ரீட்டிகா கேரா, ஆய்வு மேற்கொண்டுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் அவர் பேசுகையில், “கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகள் மந்தமாக இருப்பதைக் காண முடிகிறது. ஏழைத் தொழிலாளர்களும், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுபவர்களும் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பது ஆச்சரியமில்லை” என்று கூறியுள்ளார்.
கிராமப்புறங்களில் கிடைக்காத வங்கிச் சேவை! கிராமப்புறங்களில் கிடைக்காத வங்கிச் சேவை! Reviewed by நமதூர் செய்திகள் on 04:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.