சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்...!



உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல்நோய்களைக்  குணப்படுத்தும்.
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
 
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
 
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல்  பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
 
நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு,  அந்நீரை பருக வேண்டும்.
 
கர்ப்பப்பை தொடர்பான சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவல் பழத்தைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வாய்வுத்தொல்லை விலகும்.
 
சர்க்கரை நோயாளிகள் இதன் விதைகளை நிழலில் உலர்த்தி சுமார் ஒரு கிராம் அளவு காலை - மாலை என சாப்பிட்டு வந்தால் படிப்படியாக சர்க்கரை நோய்   குறையும்.
சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்...! சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்...! Reviewed by நமதூர் செய்திகள் on 04:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.