தவறான பாதையில் இந்தியா செல்கிறது!

தவறான பாதையில் இந்தியா செல்கிறது!

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா தவறான பாதையில் பெரும் தொலைவுக்கு எட்டிக் குதித்திருக்கிறது என்று பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கருத்துத் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாகவும், வளரும் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து பின்னடைவைக் கண்டுள்ளதாகவும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் விமர்சித்துள்ளார். ஜூலை 8ஆம் தேதி டெல்லியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர், "நிலைமை மிகவும் தவறாகப் போய்விட்டது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தவறான பாதையில் பெரும் தொலைவுக்கு இந்தியா எட்டிக் குதித்துள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகளில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இருந்தது. ஆனால் இப்போது இரண்டாவது மோசமான நாடாக இந்தியா மாறியுள்ளது. முதல் மோசமான நாடு என்ற இடத்திற்கு நம்மை விடாமல் பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
’An Uncertain Glory: India and its Contradiction’ என்ற ஆங்கில நூலின் ’Bharat Aur Uske Virodhabhas’ என்ற இந்திப் பதிப்பு வெளியீட்டு நிகழ்வில் இவர் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பொருளாதார அறிஞரான ஜியான் திரேஸுடன் இணைந்து இந்த நூலை ஆங்கிலத்தில் அமர்த்தியா சென் எழுதியுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நிலைமை குறித்தும் இந்த நிகழ்வில் அமர்த்தியா சென் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி மோடிக்கு எதிரான அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் பேசியுள்ளார்.
தவறான பாதையில் இந்தியா செல்கிறது! தவறான பாதையில் இந்தியா செல்கிறது! Reviewed by நமதூர் செய்திகள் on 23:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.