உரிமைகளின் காவலன், விருதுகளின் நாயகன்!

உரிமைகளின் காவலன், விருதுகளின் நாயகன்!

தினப் பெட்டகம் – 10 (18.07.2018)
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவருமான நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று (ஜூலை 18). நெல்சன் மண்டேலா தினமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்தில் அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்:
1. நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாலா தலிபுங்கா மண்டேலா (Rolihlahla Dalibhunga Mandela). அதன் அர்த்தம், மரத்தின் கிளையை இழுப்பது அல்லது தொல்லை கொடுப்பது!
2. நெல்சன் என்ற பெயர் அவரது பள்ளி ஆசிரியரால் கொடுக்கப்பட்டது.
3. Australopicus Neson Mandelai என்று ஒரு மரங்கொத்தி, Paravanda Nelsaon Mandela என்று ஒரு orchid, Mandela துகள் என்று ஒரு அணு துகள் ஆகியவை இவரின் பெயரால் வழங்கப்படுகின்றன.
4. Witwatersrand பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த மண்டேலா, முதன்முறையாகக் கறுப்பின மக்களுக்கான சட்ட நிறுவனத்தை உருவாக்கினார்.
5. மண்டேலா மூன்று முறை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள்.
6. ஐநா மண்டேலாவின் பிறந்த நாளை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது. ஒரு தனி நபருக்காக ஒரு நாளை வழங்குவது அவருக்காகத்தான் முதன்முறை நிகழ்ந்தது.
7. மண்டேலாவின் சிறை எண் 46664. அதாவது, 1964ஆம் ஆண்டில் 466ஆவதாகச் சிறையில் அடைக்கப்படும் நபர் என்பதன் அடையாளமாகவே இந்த எண் கொடுக்கப்பட்டுள்ளது.
8. மண்டேலாவும் அவரது சகோதரர் ஜஸ்டிஸும் 1941ஆம் ஆண்டு, வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தைத் தவிர்ப்பதற்காக வீட்டை விட்டு ஓடிச் சென்றுவிட்டார்களாம்.
9. மண்டேலா தன் வாழ்வில், 1993ஆம் ஆண்டு பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு உட்பட 695க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
10. 25க்கும் மேற்பட்ட பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இவர் பெயரால் வழங்கப்படுகின்றன; 95க்கும் மேற்பட்ட சிலைகள், சிற்பங்கள், கலை வடிவங்கள் இவருக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
- ஆஸிஃபா
உரிமைகளின் காவலன், விருதுகளின் நாயகன்! உரிமைகளின் காவலன், விருதுகளின் நாயகன்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.