சீர்திருத்தம் அல்ல, புரட்சிதான் தேவை!

 சீர்திருத்தம் அல்ல, புரட்சிதான் தேவை!

நீதித் துறையில் சீர்திருத்தம் தேவையில்லை, புரட்சிதான் தேவை என உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் ஒய்வு பெறுகிறார். அவரையடுத்து, தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட வாய்ப்பு பெற்றுள்ள நீதிபதி ரஞ்சன் கோகாய் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார்.
அப்போது, அவர் சுதந்திரமான நீதிபதிகளும் குரல் எழுப்பும் பத்திரிகையாளர்களும் ஜனநாயகத்தைக் காக்கும் தூண்கள் என்று கூறினார். ”சுதந்திரம் பெற்ற முதல் 50 ஆண்டுகளில், நீதிமன்றம் மிகச்சிறந்த நீதி பரிபாலனத்தை உருவாக்கியுள்ளது. தற்போது, அதைத்தான் நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அதனால், நீதிபதிகள் சுதந்திரமாக மட்டுமல்லாமல், ஜனநாயகத்துக்கென்று குரல் எழுப்புபவர்களாகவும், பத்திரிகையாளர்கள் உரத்த குரல் எழுப்புபவர்களாக மட்டுமல்லாமல், சுதந்திரமாகவும் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் ஜனநாயகத்தைக் காக்கும் தூண்கள். நீதித் துறையில் சீர்திருத்தம் அல்ல, புரட்சிதான் தேவை. மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்குவது நீதித்துறை. இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன். இது பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பது மிக முக்கியம்.
ஆனால், நீதித்துறை நிர்வாகத்தில் "திறமையற்றது" மற்றும் "மெதுவான செயல்முறைகள்" ஆகியவை வரலாற்றுச் சவால்களாக இருக்கின்றன. கருவி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறும் வேலைக்காரன் கிடையாது. கருவியே இல்லாத வேலைக்காரன்போல்தான் இருக்கிறது இன்றைய நீதித் துறை.
நீதித்துறை இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முன்னணியில் இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், நீதித்துறையின் செயல்பாட்டின் ஆற்றல் மற்றும் செயல்திறன் பற்றிய விஷயங்களில் ஒரு நிறுவனமாக அதன் பங்கை மறுபடியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். நீதித்துறையின் பார்வையும், அதன் செயல்பாட்டையும் இணைப்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராகப் புகார் தெரிவித்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்திருத்தம் அல்ல, புரட்சிதான் தேவை! சீர்திருத்தம் அல்ல, புரட்சிதான் தேவை! Reviewed by நமதூர் செய்திகள் on 04:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.