அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கதீப் இம்ரான்’ விடுதலை!

அவுரங்காபாத்: கடந்த 30-05-2006-ல், மகாராஷ்டிரா ஏ.டி.எஸ். போலீஸ் படையினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, ஒருவார காலத்துக்குப் பின்பு 07-06-2006-ல் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ‘இம்ரான் கதீப்’ 9 ஆண்டுகளுக்குப்ப்பிறகு நேற்று முன்தினம் (19/03/2015) விடுதலை செய்யப்பட்டார்.
மும்பை ஆர்தர் ரோடு ஜெயில் வாசலில் கண்ணீரோடு காத்திருந்த ஒய்வு பெற்ற ஆசிரியரான அவரது தந்தை ‘அகீல் அஹ்மத்’ மகனை கட்டித்தழுவி வரவேற்றார்.

முன்னதாக, கடந்த 09-03-2015 அன்றே, மும்பையின் மக்கோகா சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ‘இம்ரான் கதீப்’ குறித்த நீதிமன்ற உத்தரவு ஜெயில் நிர்வாகத்துக்கு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேலும் 10 நாட்களை ஜெயிலில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இம்ரான் விடுதலைக்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ‘ஜம்யியதுல் உலமா’ மகாராஷ்டிர அமைப்புக்கு நன்றி செலுத்தும் வகையில், தந்தையும் மகனும் நேராக ‘ஜம்யியத்’ அலுவலகத்துக்கு சென்றனர்.
ஜம்யியத்தின் சட்டத்துறை செயலாளர் ‘குல்சார் ஆசமி’ ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ‘இம்ரான் கதீப்’ தனது எதிரிக்கு கூட இதுபோன்ற நிலை வரக்கூடாது என்றார்.
இம்ரானின் தந்தை அகீல் அஹ்மத் பேசும்போது, எனது மகனை மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வந்த வேளையில், அவன் கைது செய்யப்பட்டது எங்களை நிலை குலைய வைத்து விட்டது என்றார்.
மகன் கைது காரணமாக மற்ற பிள்ளைகளின் திருமணத்துக்கு ஏற்பட்ட தடை உள்ளிட்ட வேதனையான பல சம்பவங்களை நினைவு கூர்ந்த அகீல், எனது மகனின் 9 ஆண்டுகால சிறை வாழ்க்கையை அரசால் திரும்ப கொடுக்க முடியுமா எனக் கேள்விஎழுப்பினார்.
முன்னதாக இதே வழக்கில் இம்ரானுடன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அப்துல் கான் என்ற வாலிபரும் (டி-சர்ட் அணிந்திருப்பவர்) செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/71843#sthash.3zjS4qmc.dpuf
அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கதீப் இம்ரான்’ விடுதலை! அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கதீப் இம்ரான்’ விடுதலை! Reviewed by நமதூர் செய்திகள் on 06:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.