கிரிக்கட் : உலகப்போர் III – ஆரூர் யூசுப் தீன்
கிரிக்கட் – 11 முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்றார் பெர்னாட்ஷா.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கட் போட்டி உலக மக்களிடம் அதிக கவனத்தை ஈர்த்தது என்பதை விட இந்தியர்களை தான் அதிகம் ஈர்த்துள்ளது. இந்த உலககோப்பையில் விளையாடும் அணிகள் சொந்த நாட்டிற்காக விளையாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது தங்களுடைய தொழிலாக கருதி தான் விளையாடுகின்றனர். அதில் இந்தியர்களும் அடங்கும்.
பல ஊடகங்களில் இந்த போட்டிக்கு முகவும் முக்கியத்துவம் அளித்து இதற்காக தனியே ஓர் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற போட்டியில் நமது பி.சி.சி.ஐ யின் அணியும் தங்களுக்கென ஓர் இடத்தை தக்கவைத்துள்ளனர். என்ன உங்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறதா? நான் இந்திய அணியை பி.சி.சி.ஐ அணி என்று கூறுகின்றேன் என்று. ஆமாம் தோனி தலைமையில் விளையாடும் அணி இந்திய நாட்டின் சார்பு அணி அல்ல அது பி.சி.சி.ஐ என்ற தனியாரின் அணி என்கிறது மத்திய அரசு.
இந்த பி.சி.சி.ஐ யின் அணி கடந்த உலக கோப்பையை வென்று தற்பொழுது அதை விட்டு கொடுக்க கூடாது என்று விளையாடிக் கொண்டிருக்கிறது.இதற்காக ஊடகங்கள் பல விளம்பரத்தை செய்து வருகின்றது அதில் #wedontgiveitback என்ற பிரச்சாரமும் மற்றும் maucka macka என்ற பிரசாரமும் பெரும் பிரபலமடைந்தது. இந்த விளம்பரத்தை சற்று உற்று கவனித்தால், அதிலும் ஃபாசிசம் நுழைக்கப்படுள்ளது புரியும்.
பரவலாக நமது அணியை பற்றி புகழ்ந்து பல விளம்பரங்களை வெளியுடுகின்றனர். அதில் முஹம்மது சமி என்ற வீரர் மட்டும் இடம்பெறுவதில்லை . அவர்கள் வெளியிடும் குழு புகைப்படத்தில் 8 முதல் 10 நபர்கள் மட்டும் தான் இருப்பார்கள். ஏன் நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி பி.சி.சி.ஐ அணி வெற்றி பெறவேண்டி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார் அதிலிலும் கூட முஹம்மது சமி புறக்கணிக்கப்படுகின்றார்.
இதை பார்க்கும்போது ஜீவா என்ற தமிழ்படத்தில் “நாம் என்ன தான் நல்ல விளையாடினாலும் நமக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காது, நம்மை ஒதுக்கி ஒதுக்கி கிரிக்கட்டை விட்டு வெளியேற வைத்து விடுவார்கள் ” என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
மற்றொன்றும் உண்டு… அது, இந்தியா இலங்கையை வெற்றி கொண்டால் இந்தியா அபார வெற்றி என்று செய்தித்தாள்களிலும் காணொளியிலும் வரும் .அதேவேளையில் பாகிஸ்தானை வென்றால் தனது பரம விரோதி பாகிஸ்தானை இந்தியா வென்றது என்று வரும்.
இன்னும் சற்று கூடுதலாக இன்று இந்தியர்களை பச்சை நிறத்திற்கு எதிரானவர்களாக மாற்றியுள்ளது .எங்கு பார்த்தாலும் பச்சை நிறத்திற்கு எதிரான விளம்பரமும் காணொளிப்பதிவும் காணப்படுகிறது.எந்த அளவுக்கு என்றால்” நமது தேசிய கோடியில் உள்ள பச்சை நிறத்தை எடுத்துவிடலாம் என்று மத்திய அரசு கூறினால் மக்கள் சரி என்று கூறிவிடுவார்களோ” என்ற அச்சமும் எனக்கு வருகிறது. ஒருவேளை அதனால்தான் இந்த பிரச்சாரமே முன்வைக்கைப்படுகிறதா? என்றும் சந்தேகிக்கப்பட வைக்கிறது.
கிரிக்கட் மூலம் இரண்டு நாட்டின் மக்களை பிளவுபடுத்த இந்த அரசு முயல்கின்றது. அது என்ன எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு தான் காரணம் என்று சொல்லுகிறார் என்று நினைக்கலாம் !நினைப்பது தவறு இல்லை அது உங்கள் கருத்துசுதந்திரம்.
உங்கள் சந்தேகத்திற்குரிய பதிலை நான் சொல்கிறேன் நாட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் அரசுக்கு தெரியாமல் இல்லை. சில தவறான செயல்கள் நடந்தால் அதை சரி செய்யும் பொறுப்பு அரசிற்கே உள்ளது. இன்னும் சற்று கூடுதலாக தொலைகாட்ட்சியில் ஒளிபரப்பப்படுவதை கட்டுப்படுத்த தனித் துறை உள்ளது. இதுவும் இப்படிபட்ட விளம்பரத்தை தடை செய்யவில்லை.
கிரிக்கட் மூலம் தங்களுடைய கருத்தியல் போரை இந்த ஃபாஸிச சக்திகள் நடத்திவருகிறது. இதை களைய கருத்தியல் ரீதியான முன்னேற்றம் மக்களிடையே குறிப்பாக இளையதலைமுறைக்கு வரவேண்டும்..
கிரிக்கட் என்ற விளையாட்டு சிந்திக்கும் ஆற்றலை மழுங்க வைக்கிறது. இன்று எத்தனை நபர்களுக்கு தெரியும் நிலஅபகரிப்புமசோதாவை பற்றியும் மோடியின் வெளிநாட்டு பயணத்தில் மறைந்து இருக்கும் இரகசியத்தை பற்றியும்…
ஒரு தனியார் அமைப்பு நவீனகாலத்தில் முன்னேறிய கல்லூரி மாணவிகளிடம் ஓர் கேள்வியை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை அதை பார்க்கு பொழுது மனம்நொந்து போய்விட்டது.
அந்த கேள்வி “கற்பு என்றால் என்ன ?”
ஆரூர் யூசுப் தீன்
- See more at: http://www.thoothuonline.com/archives/71902#sthash.H60QKoAr.dpuf
கிரிக்கட் : உலகப்போர் III – ஆரூர் யூசுப் தீன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:12:00
Rating:
No comments: