மோடி அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு

இன்றைய ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படும் பண்பும் கூட இது.  இந்தியா விடுதலை பெறும் முன்பு நடந்த சம்பவம் இது.
அவத் அரசை நவாப்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். லக்னோவை தலைநகராகக் கொண்ட அவத் நவாப்கள் எல்லா மதத்தையும் சமமாக மதிக்கக் கூடியவர்கள். நவாப் முஸ்லீம்களாக  இருந்த போதிலும் கூட அரசே ஹிந்துப் பண்டிகைகளான தசரா, தீபாவளி, ஹோலி ஆகியவற்றைக் கொண்டாடும்.


1846 முதல் 1856 வரை அவத் அரசின் நவாபாக நவாப் வாஜித் அலி ஷா ஆட்சி செய்திருந்த காலத்தில் ஒரு ஆண்டில் ஹோலி பண்டிகையும் மொஹரமும் ஒரே நாளில் வந்தது. ஹோலி உற்சாகம் ததும்பும் வண்ணமயமான கொண்டாட்டம் நிரம்பிய விழா. ஆனால் மொஹரமோ துயரத்தின் அடையாளம்.

நம்முடைய முஸ்லீம் சகோதரர்கள் தங்களின் துயரத்தை அனுசரிக்கும் வேளையில் நாம் ஹோலிப் பண்டிகை கொண்டாட வேண்டாம் என லக்னோ நகர ஹிந்துக்கள் முடிவு செய்கிறார்கள். மொஹரம் ஊர்வலம் முடிந்த பிறகே அன்று ஹோலி கொண்டாடப்படவில்லை என்பதை நவாப் வாஜித் அலி ஷா அறிந்து காரணம் கேட்கிறார். ஹிந்துக்கள் எடுத்த முடிவு சொல்லப்படுகிறது.

உடனடியாக அவர் அறிவிக்கிறார்.

“ஹிந்து சகோதரர்கள் எப்படி தங்களின் முஸ்லீம் சகோதரர்களுக்காக தங்களின் பண்டிகையை கொண்டாடாமல் விட்டுக் கொடுத்தார்களோ, அந்த அன்பிற்கு நாமும் பதில் மரியாதை செய்ய வேண்டும். அவர்கள்  ஹோலிப் பண்டிகை கொண்டாட வேண்டும். நானே வண்ணங்களைப் பூசி தொடங்கி வைக்கிறேன்” என்று அறிவித்து அதனை செயல்படுத்தவும் செய்கிறார்.

இதுதான் இந்தியாவின் உண்மையான மரபு.  இன்றைய ஆட்சியாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

தகவல் சொன்னது: நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ
மோடி அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு மோடி அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு Reviewed by நமதூர் செய்திகள் on 20:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.