காஸாவில் வன்முறைகளின் பின்னணியில் ஃபதஹ்:ஆவணம் கசிந்தது!
பாலஸ்தீன்: காஸாவில் பிரச்சனைகளை உருவாக்கி ஹமாஸுக்கு கெட்டப்பெயரை உருவாக்க ரகசிய ஏஜன்சிகள் தயாரித்த திட்டத்திற்கு ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அங்கீகாரம் அளித்ததற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளது.காஸாவில் உளவாளிகளுடன் ஒத்துழைத்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் குறித்து அதிபர் அப்பாஸுக்கு, உளவுப்பிரிவு தலைவர் மஜீத் ஃபரஜ் எழுதிய கடிதம் கசிந்துள்ளது.
நவம்பர் மாதம் இதுத்தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டது.ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமையேற்கும் ஃபதஹ் இயக்கத்தின் பிரதிநிதிகள், அஸ்ஸாம் அல் அஹ்மத் மற்றும் ஃபரஜின் கையெழுத்துக்கள் இக்கடிதத்தில் உள்ளன.ஃபலஸ்தீனியன் நியூஸ் ஏஜன்சியான ’ஸஃபா’ இக்கடிதத்தை வெளியிட்டுள்ளது.
காஸாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக வெளியுலகை தவறாக புரியவைக்க உளவுத்துறை அதிகாரிகள் வாகனங்களுக்கு தீவைக்கவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.’அதற்காக தனியாக குழுக்களை உருவாக்கவேண்டும்.இவர்கள் ஹமாஸ் மற்றும் இதரக்குழுக்களை குறிவைப்பார்கள்.ஃபதஹ் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முஹம்மது தஹ்லானுடன் தொடர்புடைய தலைவர்களுக்கும் குறிவைக்கப்படும்.அப்பாஸுடன் நெருக்கமாக உள்ள காஸாவின் ஃபதஹ் தலைவர்களின் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தவேண்டும்’இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் சமூக ஊடகங்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.பல்வேறு குழுக்களின் பெயரால் துவேச பரப்புரைகளில் ஈடுபடுவது, காஸாவில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை மிகைப்படுத்தும் செய்திகளை பரப்புவது, வன்முறைகளின் பெயரால் ஹமாஸை குற்றம் சாட்டுவது, வன்முறைகள் தொடர்பாக இஸ்லாமிக் ஜிஹாத் உள்ளிட்ட போராட்ட இயக்கங்களிடம் ஃபதஹ் இயக்கம் விளக்கம் கேட்கவேண்டும் போன்ற தகவல்களும் கடிதத்தில் அடங்கியுள்ளன.
கடிதத்தில் குறிப்பிட்ட பல சம்பவங்களும் காஸாவில் நடந்தேறியுள்ளது.நவம்பர் மாதம் காஸாவில் ஃபதஹ் தலைவர்களின் வீடுகள், வாகனங்கள் மீது குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன.இதனைத்தொடர்ந்து ஃபலஸ்தீன் ஐக்கிய அரசு தலைவர் ரமி அப்துல்லாஹ் காஸா பயணத்தை ரத்துச் செய்தார்.வன்முறைகளின் பின்னணியில் ஹமாஸ் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/71770#sthash.KVqBynsy.dpuf
காஸாவில் வன்முறைகளின் பின்னணியில் ஃபதஹ்:ஆவணம் கசிந்தது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:29:00
Rating:
No comments: