எகிப்து ராணுவ ஆட்சிக்கு எதிராக இக்வானுல் முஸ்லிமீன் கடும் கண்டனம்
கெய்ரோ: எகிப்து நாட்டில் நடக்கும் கொடுங்கோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக தன் கருத்துக்களை தைரியமாக முன் வைத்துள்ளார் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முஹம்மத் முன்தஸிர்.
இச்செய்திகள் இக்வான் வெப் என்ற செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.
அச்செய்தி பின்வருமாறு:-
அப்பாவி ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் எகிப்தின் ஒவ்வொரு தெருவிலும் சதுக்கங்களிலும், சிறைகளிலும் காவல் நிலையங்களில் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ஃபாசிஸ அரசாங்கத்தையும் அதனது நயவஞ்சகத்தனமான சதிகளையும் முறியடித்து தூக்கியெறியும் புதியதொரு சரித்திரப் புரட்சியை வீர மரணம் அடைந்தவர்கள் தங்களது குருதியினால் எழுதி வருகின்றனர்.
மதாரியா காவல் நிலையத்திலும் அதற்கு முன்பாக போராட்டங்களில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களின் இரத்தம் - ஃபாசிசத்தையும் இருளையும் கொண்டு கட்டப்பட்ட அடக்குமுறையாளர்களின் கோட்டைகளையும் அசத்தியத்தின் அரண்களையும் அழித்தொழிக்கும் சாபக்கேடாக அமையும்.
தாயகமெங்கும் புரட்சியை நடத்திச் செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்கிறேன்...
அமைதியான போராட்டத்தால் நீங்கள் மாபெரும் சரித்தரப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். இதற்காக உங்களது விடுதலையையும் இரத்தத்தையும் நீங்கள் அர்ப்பணிப்பது இறுதி நாட்களின் பதிவுகளில் எழுதப்படும். இந்தக் கொலைகாரனையும் சாத்தானிய கோட்டைகளில் தஞ்சம் அடைந்திருக்கும் அவனது சேவகர்களையும் நாளுக்கு நாள் வளர்ந்து வலிமை பெற்றுவரும் இப்புரட்சியை முழுமைப்படுத்துவதன் மூலமாக முற்றுகையிடுங்கள்!
எதிரிகளின் அநீதத்தாலும் அன்பிற்குரியவர்களின் இழப்பால் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் இன்னல் அடையும் இத்தாயகத்தின் சத்தியப் பாதையில் உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்தாரே! கொலைகாரர்கள் தூக்குமேடையில் ஏற்றப்படும் நாள்; ஃபாசிசத்தின் கோட்டைகளும் அநீதியின் அசத்தியத்தின் அரண்களும் தவிடுபொடியாக்கப்படும் நாள் தொலைவில் இல்லை!
துரோகமிழைத்த சர்வாதிகாரிகளையும் கொலைகாரக் கொடுங்கோலர்களையும் அந்நாளில் பழிவாங்காமல் விடமாட்டோம். அந்நாளில் உங்களது இருதயங்கள் மகிழ்ச்சியுறும்! அந்நாள் வெகுவிரைவில் வரும்.
இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பிலிருந்து வெளியாகியுள்ள இச்செய்தி, எகிப்து ராணுவ ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி - அபூஷேக் முஹம்மத்
கெய்ரோ: எகிப்து நாட்டில் நடக்கும் கொடுங்கோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக தன் கருத்துக்களை தைரியமாக முன் வைத்துள்ளார் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முஹம்மத் முன்தஸிர்.
இச்செய்திகள் இக்வான் வெப் என்ற செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.
அச்செய்தி பின்வருமாறு:-
அப்பாவி ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் எகிப்தின் ஒவ்வொரு தெருவிலும் சதுக்கங்களிலும், சிறைகளிலும் காவல் நிலையங்களில் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ஃபாசிஸ அரசாங்கத்தையும் அதனது நயவஞ்சகத்தனமான சதிகளையும் முறியடித்து தூக்கியெறியும் புதியதொரு சரித்திரப் புரட்சியை வீர மரணம் அடைந்தவர்கள் தங்களது குருதியினால் எழுதி வருகின்றனர்.
மதாரியா காவல் நிலையத்திலும் அதற்கு முன்பாக போராட்டங்களில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களின் இரத்தம் - ஃபாசிசத்தையும் இருளையும் கொண்டு கட்டப்பட்ட அடக்குமுறையாளர்களின் கோட்டைகளையும் அசத்தியத்தின் அரண்களையும் அழித்தொழிக்கும் சாபக்கேடாக அமையும்.அச்செய்தி பின்வருமாறு:-
அப்பாவி ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் எகிப்தின் ஒவ்வொரு தெருவிலும் சதுக்கங்களிலும், சிறைகளிலும் காவல் நிலையங்களில் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ஃபாசிஸ அரசாங்கத்தையும் அதனது நயவஞ்சகத்தனமான சதிகளையும் முறியடித்து தூக்கியெறியும் புதியதொரு சரித்திரப் புரட்சியை வீர மரணம் அடைந்தவர்கள் தங்களது குருதியினால் எழுதி வருகின்றனர்.
தாயகமெங்கும் புரட்சியை நடத்திச் செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்கிறேன்...
அமைதியான போராட்டத்தால் நீங்கள் மாபெரும் சரித்தரப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். இதற்காக உங்களது விடுதலையையும் இரத்தத்தையும் நீங்கள் அர்ப்பணிப்பது இறுதி நாட்களின் பதிவுகளில் எழுதப்படும். இந்தக் கொலைகாரனையும் சாத்தானிய கோட்டைகளில் தஞ்சம் அடைந்திருக்கும் அவனது சேவகர்களையும் நாளுக்கு நாள் வளர்ந்து வலிமை பெற்றுவரும் இப்புரட்சியை முழுமைப்படுத்துவதன் மூலமாக முற்றுகையிடுங்கள்!
எதிரிகளின் அநீதத்தாலும் அன்பிற்குரியவர்களின் இழப்பால் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் இன்னல் அடையும் இத்தாயகத்தின் சத்தியப் பாதையில் உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்தாரே! கொலைகாரர்கள் தூக்குமேடையில் ஏற்றப்படும் நாள்; ஃபாசிசத்தின் கோட்டைகளும் அநீதியின் அசத்தியத்தின் அரண்களும் தவிடுபொடியாக்கப்படும் நாள் தொலைவில் இல்லை!
துரோகமிழைத்த சர்வாதிகாரிகளையும் கொலைகாரக் கொடுங்கோலர்களையும் அந்நாளில் பழிவாங்காமல் விடமாட்டோம். அந்நாளில் உங்களது இருதயங்கள் மகிழ்ச்சியுறும்! அந்நாள் வெகுவிரைவில் வரும்.
இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பிலிருந்து வெளியாகியுள்ள இச்செய்தி, எகிப்து ராணுவ ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி - அபூஷேக் முஹம்மத்
எகிப்து ராணுவ ஆட்சிக்கு எதிராக இக்வானுல் முஸ்லிமீன் கடும் கண்டனம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:52:00
Rating:
No comments: